Cinema

இளையராஜா விவகாரத்தில் இயக்குனர் பேரரசு கருத்தால் பரபரப்பு..! இரண்டு தரப்பு உள்ளதா?

Ilayaraja and perarasu
Ilayaraja and perarasu

தமிழ் திரை உலகின் ஒப்பற்ற இசை அமைப்பாளர் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டார் என்ற கருத்திற்காக சில மோடி எதிர்ப்பு அரசியல் செய்யும் கட்சிகள், தனியார் அமைப்புகள் கடுமையாக இளையராஜாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.


அதே நேரத்தில் இளையராஜாவிற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர், அந்த வகையில் இயக்குனர் பேரரசு தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார் அது பின்வருமாறு :-

வருஷம் 16 என்ற படத்தில்'கங்கைக்கரை மன்னனடி' என்ற பாடலை இசைஞானி அவர்கள் தோடி ராகத்தில் போட்டிருப்பார். அது பெரிய HIT. அவர் தோடி ராகத்தில் போட்டாலும், மோடி ராகத்தில் போட்டாலும்  எல்லாமே HIT தான். பஞ்ச் வசனம் குறிப்பிட்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் பேரரசு.


இது தவிர்த்து எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் இளையராஜா கருத்து குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் அது பின்வருமாறு :- இளையராஜாவின் அறிக்கையில் ஒன்றும் பெரிய தவறோ குழப்பமோ இருப்பதாக தெரியவில்லை, அம்பேத்கர் உண்மையான இந்தியர் அதனால்தான் பாகிஸ்தானில் வரவேற்பு இருந்தபொழுதும் கூட இந்தியனாக இருந்தார்.

சில சாதிய கொடுமைகளை களைய போராடினாரே அன்றி இந்திய தேசத்தை அவர் வெறுக்கவே இல்லை, கடைசிவரை தனிநாடோ பிரிவினைகளையோ ஆதரிக்கவில்லை, தாழ்த்தபட்ட மக்களுக்கு தனி தேசம் என்றெல்லாம் கிளம்பவில்லை.

அவரை அந்நாளைய ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் அதன் அரசியல் அமைப்பான ஜனசங்கமும் ஏற்றுகொண்டன, அவரும் அவர்கள் பால் அபிமானம் கொண்டிருந்தார், காங்கிரஸும் நேருவும் தேர்தலில் வென்றால் அம்பேத்கர் அமைச்சராகிவிடுவார் என விரட்டி அடித்து தோற்கடித்தபொழுது ஜனசங்கமும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புமே அவரை மேல் சபை எம்பியாக்க பாடுபட்டது.

இன்றும் அம்பேத்கர் இருந்தால் பல விஷயங்களுக்காக பாஜகவினை ஆதரித்திருப்பார் அதில் சந்தேகமே இல்லை, பாஜக இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சி அல்ல, அதன் அரசியலில் சாதி இல்லை எல்லா இன மக்களுக்கும் எல்லா வகை வாய்ப்பும் வழங்கபட்டிருக்கின்றது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை அம்பேத்கர் விமர்சிக்காமல் அமைதி காத்ததற்கு அந்த அமைப்பில் சாதி தாண்டிய சமத்துவம் இருந்ததும் ஒரு காரணம், இன்று பாஜக இட ஒதுக்கீட்டை நிலை நிறுத்தியிருக்கின்றது, அம்பேத்கர் சொன்னபடி இந்த இடஒதுக்கீடு 3 தலைமுறைக்கு பின் மறுபரிசீலனை செய்யபட வேண்டும் எனப்தையும் செய்கின்றது.

பாஜக ஆட்சியில்தான் தாழ்த்தபட்டவர்கள் குடியரசு தலைவராகவும் தகுதியுள்ளோர் அமைச்சர்களாகவும் நிற்கின்றனர், இதெல்லாம் அம்பேத்கரின் கனவுகள் அதைத்தான் இளையராஜா சொன்னார்.

அம்பேத்கர் என்றல்ல  காமராஜர் ராஜாஜி என அன்றைய தலைவர்கள் இன்று இருந்திருந்தாலும் தயக்கமின்றி பாஜகவினை ஏற்றுகொள்வாகள் என்பதே உண்மை, இளையராஜா ஒரு தாழ்த்தபட்டவர், அவர் தன் இசைஞானம் ஒன்றால் அடையாளம் பெற்றவர், எந்த இடத்திலும் அவர் இந்துமத விரோதமோ இந்துத்துவ எதிர்ப்போ காட்டியதில்லை.

அந்த இளையராஜா அம்பேத்கரை சரியாக உணர்ந்திருக்கின்றார் உணர்ந்ததை சொல்லியிருக்கின்றார் இளையராஜாவினை இவர்கள் கரித்து கொட்ட அவரின் அம்பேத்கர் பற்றிய கருத்து அல்ல விஷயம், அவர் ஒரு இந்து என்பதும் ஈரோட்டு ராம்சாமி படத்துக்கு இசை அமைக்கமாட்டேன் என அவர் மறுத்ததும், இன்றுவரை திருநீறும் குங்குமம் தாங்கி தன்னை "திருநீலநக்க நாயனாராக" கருதி வாழும் அந்த தூய இந்துவாழ்வுதான் காரணம்.

அது ஒன்றுதான் காரணம், இப்பொழுது அம்பேத்கர் என்றல்ல 1950களில் வாழ்ந்த எல்லா நாட்டுபற்றுள்ள தலைவர்களும், காங்கிரஸை எதிர்க்கமுடியாமல் மனதிற்குள் அழுத எல்லா தலைவர்களும் இன்று இருந்திருந்தால் நிச்சயம் பாஜகவினைத்தான் வாழ்த்துவார்கள் காமராஜர் கக்கன் உள்பட என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.

தமிழ் சினிமாவில் இளையராஜா கருத்திற்கு ஆதரவு எதிர்ப்பு என இரண்டு தரப்பு உருவாகியுள்ள சூழலில் இளையராஜாவிற்கான ஆதரவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.