Tamilnadu

ஒரே வாரம் தான் டைம் இல்லையென்றால் அதான் முடிவு கடும் எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம் !!!

madras high court
madras high court

சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள புறநகர்  மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகள், தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.


ஏராளமான பகுதிகளில் மக்கள் மழை நீரால் சூழப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்ட சூழல் உண்டாகியுள்ளது. மேலும் சில பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் 2015ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டதற்குப் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? சென்னையில் மழைநீர் தேங்கியது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2015ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டதற்கு பிறகும் மழைநீர் தேங்காமல் இருக்க என்னதான் செய்துகொண்டிருந்தீர்கள் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி தெரிவித்து சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

பாதி நாள் தண்ணீருக்காகவும், மீதி நாள் தண்ணீரிலும் மக்கள் தவிக்கின்றனர். மழை, வெள்ளம் அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்துள்ளது எனவும் கருத்து தெரிவித்துள்ளது நீதிமன்றம். சாலையை அகலப்படுத்துவது தொடர்பாகப் பொதுநல வழக்கு ஒன்றில் நீதிமன்றம் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது.

மேலும் ஒரு வாரத்திற்குள் நிலைமையை சரி செய்யவில்லை என்றால் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யவேண்டிய சூழல் உண்டாகும் எனவும் தலைமை நீதிபதி தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மாநகராட்சி தரப்பிற்கும் குறிப்பாக ஆளும் கட்சியான திமுகவிற்கு கடும் நெருக்கடி உண்டாகியுள்ளது.