Tamilnadu

#BREAKING மின் கட்டணம் செலுத்துவது எப்படி? பொதுமக்கள் தலையில் இடியாய் இறங்கிய அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!!

#BREAKING மின் கட்டணம் செலுத்துவது எப்படி? பொதுமக்கள் தலையில் இடியாய் இறங்கிய அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!!
#BREAKING மின் கட்டணம் செலுத்துவது எப்படி? பொதுமக்கள் தலையில் இடியாய் இறங்கிய அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!!

இன்று தமிழகத்தில் கொரோனாவை விட பெரும்  எதிர்பார்பாக மாறியிருப்பது மின் கட்டணம் பற்றிய செய்தி தான்.ஏனெனில் மாதாந்திர மின் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டால், வீட்டு மின் உபயோக நுகர்வோர்ருக்கு மின் கட்டணம் குறையும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.


இது குறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றுமள் கூறியிருந்தார்.

தற்போது தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கட்டி வரும் நிலை தான் உள்ளது. இதன்படி முதல் 100 யூனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது.

தமிழக அரசின் தற்போதைய மின் கட்டண அணுகுமுறையால் நடுத்தர மக்கள் தான் அதிக கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதிலும் தற்போதுள்ள கொரோனா நெருக்கடி போன்ற நெருக்கடியான நேரங்களில் இன்னும் நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார்கள். அதோடு இரு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கீடு செய்யப்படுவதால் மக்கள் அதிக கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் இந்த நிலை மாறும் என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் நிலவியது.

மேலும் திமுக ஆட்சியில் மின் கட்டணம் ரத்து செய்யபடலாம் எனவும் கூறப்பட்டது, ஆனால் இன்றைய தினம் அவை அனைத்திலும் மண்ணள்ளி போட்டுள்ளது மின்சாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு, மே மாதம் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை பொதுமக்களே அளவீடு செய்து கட்டி கொள்ளலாம் என தெரிவித்து உள்ளது.

மின் மீட்டரை போட்டோ எடுத்து அதில் காட்டப்படும் அளவீட்டை கொண்டு மின் கட்டணத்தை செலுத்தலாம் எனவும், குறிப்பிட்டுள்ளது, இதில் முதல் 100 யூனிட் இலவசம் என்றோ அல்லது மின் கட்டணம் செலுத்த அவகாசம் குறித்தோ எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை, தற்போதைய சூழலில் பொது மக்களே ரீடிங் எடுத்து அதில் காட்டப்படும் அளவீட்டிற்கு ஏற்ப மின் கட்டணத்தை செலுத்தலாம் என குறிப்பிட்டுள்ளது.

மற்றபடி திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது ஊரடங்கு காலத்தில் மின் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் என தெரிவித்தது, ஆனால் ஆளும் கட்சியாக வந்த நிலையில் மின் கட்டணம் ரத்து ஆகும் என்று எதிர்பார்த்தவர்கள் தலையில் மண்ணள்ளி போட்டுள்ளது மின்சாரத்துறையின் புதிய அறிவிப்பு.