24 special

ஒன்றிணைந்த இந்துக்கள்.. மேற்கு வங்கத்தில் ஒரே இரவில் அமலான வக்பு சட்டம்... யு டர்ன் அடித்த மம்தா

MAMATABANERJEE,WAQFBOARD
MAMATABANERJEE,WAQFBOARD

மேற்குவங்க அரசு, மாநிலம் முழுவதும் உள்ள Waqf சொத்துக்களை மத்திய அரசின் UMEED போர்ட்டல் என்ற புதிய தேசிய தரவுத்தளத்தில் பதிவேற்றுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவசர உத்தரவு வழங்கியுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த Waqf சட்டத் திருத்தத்தின் படி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து Waqf சொத்துகளும் டிசம்பர் முதல் வாரத்துக்குள் இந்த போர்ட்டலில் சேர்க்கப்பட வேண்டும். இந்த முடிவை மம்தா  அரசு ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்தது. மம்தா பானர்ஜி அரசு “மத்திய அரசு மாநில உரிமையை தகர்க்கிறது" என்று குற்றம்சாட்டி, புதிய சட்டத்தை பொதுவெளியில் விமர்சித்தது மேலும் இந்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என கூறியது.


ஆனால்  தற்போது மம்தாஅரசு  யூ-டர்ன்” அடித்து வக்பு சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தியுள்ளது. மேலும் அந்த உத்தரவில் மாவட்ட ஆட்சியர்கள் Waqf வாரியத்துடன் இணைந்து, அனைத்து சொத்துக்களின் பரப்பளவு, பயன்பாடு, வருவாய் விவரங்களை சேகரித்து போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும். அதோடு, இமாம்கள், முஅஜ்ஜின்கள், மதரசா ஆசிரியர்கள், மசூதி நிர்வாகிகள் ஆகியோருடன் விளக்க கூட்டங்கள் நடத்தவும், UMEED போர்ட்டல் பயன்பாடு குறித்த பயிற்சி வழங்கவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பதிவேற்றத்திற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹெல்ப் டெஸ்க் அமைக்க அரசும் அறிவுறுத்தியுள்ளது.

மொத்தத்தில், மேற்குவங்க அரசு எடுத்த இந்த முடிவு நிர்வாக ரீதியாக ஒரு பெரிய மாற்றமாகவும், அரசியல் ரீதியாக ஒரு பெரிய விவாதமாகவும் மாறியுள்ளது. மத்திய அரசின் அழுத்தத்தால் மாநிலம் இப்போது செயல்படத் தொடங்கியிருக்கிறது. இதறகு மற்றொரு காரணம் தற்போது தெரிய வந்துள்ளது  எஸ்.ஐ.ஆர் என்னும் சிறப்பு தீவிரமாக வாக்காளர் திருத்த பரிசோதனையை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தில் செயல்படுத்தி வருகிறது.அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர், தங்கள் குடும்பத்தினருடன் சொந்த நாடு திரும்பத் துவங்கியுள்ளனர்.அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள், தங்கள் சொந்த நாடு திரும்ப துவங்கியுள்ளனர். குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் வெளியேறத் துவங்கிய அவர்களால், மேற்கு வங்க எல்லையில் அமைந்துள்ள ஹக்கீம்பூர் சோதனைச்சாவடி நிரம்பி வழிகிறது.

இவர்கள் அனைவரும் கடந்த தேர்தலில் வாக்களித்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. 

மம்தா அரசு சிறுபான்மையினர் ஓட்டுக்களை வைத்து தான் இதுநாள் வரை வெற்றி பெற்று வந்தார் மேலும் சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்கிய க்களுக்கு ஒட்டு போட்டு வந்தார்கள். தற்போது எஸ்.ஐ.ஆர் பணிகளின் மூலம் போலி வாக்காளர்கள் அதிகமாக நீக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் வரும் அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை வாக்குகளை நம்பி இறங்கினால் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் வக்பு சட்டத்தை சத்தமில்லாமல் அமளிப்படுத்தியுள்ளது மம்தா அரசு என்ற குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. 

மேலும் பெரும்பான்மையான இந்துக்கள் ஓட்டுகள் இந்தமுறை ஒன்றிணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது,இதனை தொடர்ந்து தான் மம்தா நடவடிக்கை மாறியுள்ளது. மேலும் மே.வங்கத்தில் தேர்தல் நடக்கும் போதெல்லாம் வெள்ளை புடவை, பூ, தேங்காய் போன்றவைகளை பாஜக நிர்வாகிகளின் வீட்டு வாசலில் வைத்து விட்டு செல்வார்கள்.பாஜகவுக்கு வாக்களித்தால் பெண்கள் விதவையாக்கப்படுவார்கள் என்பதற்கான எச்சரிக்கையை மம்தா குண்டர்கள்  வீட்டின் வாசலில் வைப்பார்கள் என  பாஜக எம்.பி.பிரிஜ்லால் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.