
நாட்டு சுதந்திரத்தை முன்வைத்து 1938ல் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை, அசோசியேட்டெட் ஜர்னல்ஸ் லிமிட்டெட் AJL எனும் நிறுவனத்தின் கீழ் இயங்கியது. இந்த பத்திரிகையை உருவாக்குவதற்கான நிதியில் 5000க்கும் இந்தியர்கள் பங்களித்தார்கள். பொதுமக்களின் பங்களிப்பில் உருவான பத்திரிகை என்ற பெருமை இருந்தாலும், காலப்போக்கில் பத்திரிகையின் நிர்வாகமும் முடிவெடுக்கும் உரிமையும் முழுவதும் காங்கிரஸ் தலைமையிடம் சென்று சேர்ந்து விட்டது. சுதந்திரப் போராட்டகால கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பத்திரிகை, பின்னர் அரசியல் மாற்றங்களும் நிதி பிரச்சனைகளும் காரணமாக செயல்பாட்டில் சிரமம் அடைந்து, இறுதியில் 2008ல் முற்றிலுமாக மூடப்பட்டது.
இந்த நிலையில் 2010ல் “யங் இந்தியா” எனும் புதிய நிறுவனத்தை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இணைந்து தொடங்கினர். இதன்பின் 2011ல், காங்கிரஸ் கட்சி சார்பில் AJL நிறுவனத்திற்கு 90.25 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஆனால் AJL அந்த கடனை திருப்பிச் செலுத்தவில்லை . இதனை காரணமாக்கி காங்கிரஸ் கட்சி, தன்னிடம் உள்ள 90 கோடி கடனை வசூலிக்கும் உரிமையை யங் இந்தியா நிறுவனத்துக்கு வெறும் 50 லட்சம் ரூபாய் பெறுமதிக்கு ஒப்படைத்தது.இந்த பரிமாற்றம் நடந்த உடனே, AJL நிறுவனத்தின் பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துக்கள் யங் இந்தியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு மாறின.
இந்த நிலையில் தான் தற்போது நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள் புகாரின் பேரில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, காங்கிரஸ் எம்பி ராகுல் உட்பட 6 பேர் மீது டில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் புதிதாக எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் இந்த நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ளனர். ஏ.ஜே.எல்., நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிக்கும் வகையில், இந்த பரிவர்த்தனை நடந்ததாக, பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, 2014ல் வழக்கு தொடர்ந்தார். இதை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், 2021ல் ஏற்றுக் கொண்டது.
இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, 2021ல் அமலாக்கத் துறை முறைப்படி வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறதுஇது தொடர்பாக, 751 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி வைத்துள்ளது. சமீபத்தில் இந்த வழக்கில் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. தற்போது சோனியா, ராகுலுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. குற்றபத்திரிகை தாக்கல் செய்யும் அளவு வந்துவிட்டது போபர்ஸ் வழக்குக்கு பின் சோனியா குடும்பம் சந்திக்கும் மிகபெரிய மோசடி இதுதான், இங்கேதான் பெரும் எச்சரிக்கை எழுகின்றது
இந்த வழக்கில் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் புகாரின் பேரில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, காங்கிரஸ் எம்பி ராகுல் உட்பட 6 பேர் மீது டில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் புதிதாக எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.இது தொடர்பாக பாஜவின் செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா கூறியதாவது: நேஷனல் ஹெரால்டு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் ராகுல், சோனியாவுக்கு நீதிமன்றம் நிவாரணம் அளிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் ஊழல் செய்கின்றனர் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் போல் பேசுகின்றனர். இது அடக்குமுறை என்று நினைக்கிறார்கள். இவ்வாறு ஷெசாத் பூனவல்லா தெரிவித்தார்.
