India

இந்தியர்களுக்கு மேலும் இரண்டு தீபாவளி பரிசு போடு போடு அடுத்த இரண்டு நற்செய்தி!!

pm modi
pm modi

மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு முறையே 5 மற்றும் 10 ரூபாய் குறைத்து தீபாவளி பரிசு கொடுத்துள்ள சூழலில் மேலும் இரண்டு நல்ல செய்திகள் வந்திருப்பதாக பிரபல எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் குறிப்பிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் குறிப்பிட்ட தகவல் பின்வருமாறு : ஆச்சரியங்களை கொடுக்கும் மோடி அரசு, இந்திய வரலாற்றிலே மிக பெரிய ஆச்சரியத்தை தீபாவளி பரிசாக கொடுத்திருக்கின்றது , ஆம் இரு பெரும் பரிசுகளை கொடுத்திருக்கின்றது. இந்தியாவின் பெட்ரோல் விலை  லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு `10 ரூபாயும் தடாலடியாக குறைக்கபட்டிருப்பது இதுவே இந்திய வரலாற்றில் முதல்முறை, ஏறிய விலைவாசி இறங்கும் அதிசயத்தை மோடி அரசுதான் முதலில் செய்திருக்கின்றது

இந்திய பெட்ரோல் விலை முதன் முதலில் விண்ணில் பறக்க ஆரம்பித்தது இந்திரா காலங்களில், அப்பொழுது டாலருக்கு எதிரான இந்தியரூபாயின் மதிப்பை அவர் சடுதியாக குறைக்க அதில்தான் பெட்ரோல் விலை எகிறி அது மன்மோகன் காலம் வரை நீடித்தது இப்பொழுது முதன் முறையாக அது மோடி ஆட்சியில் குறைந்திருக்கின்றது

இதற்கு 3 விஷயங்கள் காரணம் முதலில் இந்திய அரசின் சரியான வரிகொள்கை, முறையான வரிவசூலிலும் இறுக்கமான நடவடிக்கைகளினாலும் தேசவருமானம் அதிகரித்திருக்கின்றது, முறைகேடுகள் முழுக்க தடுக்கபட்டிருக்கின்றன‌.இரண்டாவது இந்திய பொருளாதாரம் ஏறுமுகத்தில் இருப்பது, கொரோனா காலத்திலும் இந்த அதிசயத்தை இந்தியா செய்திருக்கின்றது.

மூன்றாவது அரபு எண்ணெயுடன் ரஷ்ய எண்ணெயும் இந்தியாவால் வாங்கபடும் எனும் வகையில் சர்வதேச எண்ணெய் ஏற்றுமதிநாடுகளும் வியாபார தந்திரம் செய்கின்றன‌. இதில்தான் மத்திய அரசு விலையினை குறைத்திருக்கின்றது, அதனை தொடர்ந்து பாஜக மாநில அரசுகளும் வரியினை குறைக்க அசாம் போன்ற மாநிலங்களில் பெட்ரோல் விலை 79 ரூபாய்க்கு வர ஆரம்பித்தாயிற்று

உபி அரசும் இந்த நடவடிக்கையில் இறங்கி எண்ணெய் விலையினை குறைக்க ஆலோசிக்கின்றது, தமிழக அரசின் நிலைப்பாடு தெரியவில்லை தமிழர் அபிமான அரசு என்றால் இன்னும் குறைக்கலாம்.பெட்ரோல் விலையினை தொடர்ந்து இந்தியருக்கு கிடைத்த இன்னொரு செய்தி கோவாக்சின் நிறுவண கொரோனா மருந்தை உலக சுகாதார நிறுவணம் அங்கீகரித்திருப்பது , இதனால் இனி இந்தியர்கள் உலக பயணங்கள் மேற்கொள்ள தடையிராது அதே நேரம் கோவாக்சின் ஏற்றுமதியும் அதிகரிக்கும்.

இந்த இரு மகிழ்ச்சியான செய்தியினைடையே மூன்றாவது ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்தியாவினை எட்டியிருக்கின்றது, அந்த சுவிஷேஷ நற்செய்தியினை கொடுத்திருக்கும் நாடு ரஷ்யா, அந்த தேசம் தன் 6ம் தலைமுறை வான்பாதுகாப்பு சாதனமான "எஸ் 500" சிஸ்டத்தை இந்தியாவுக்கு வழங்க தயார் என தீபாவளி நாளில் அறிவித்திருக்கின்றது.மோடியின் ஆட்சியில் நிதி அமைச்சகம் பாதுகாப்பு அமைச்சகம் வெளியுறவுதுறை அமைச்சகம் இன்னும் சுகாதாரதுறை அமைச்சகங்கள் மிகபெரிய வரலாற்று சாதனைகளை செய்கின்றது,

இந்தியா இன்னும் பலமாக மோடி அரசு இன்னும் 15 ஆண்டுகளாவது ஆட்சியில் தொடரவேண்டும், அது நடக்க வேண்டும் என தீபாவளி நாளில் தேசம் பிரார்த்தித்து கொண்டிருக்கின்றது எனவும் உணர்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.மத்திய அரசு தீபாவளி பரிசு கொடுத்த அதே வேலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜக முதல்வர்களும் தங்கள் பங்கிற்கு பெட்ரோல் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர், இதனால் தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.