
போபால் : மத்தியபிரதேச மாநில உள்துரை அமைச்சர் மற்றும் அரசு செய்திதொடர்பாளரான நரோத்தம் மிஷ்ரா சமூக ஆர்வலரும் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை உடனடியாக திரும்பபெறவேண்டும் என நேற்று வலியுறுத்தியுள்ளார். 2002 ல் குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் 63 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் போலியான ஆவணங்கள் போலியான சாட்சிகளை உருவாக்கி வழக்கை ஜோடிக்க தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து சில ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் சில உயரதிகாரிகள் சமுக ஆர்வலர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
சமூக ஆர்வலர் என கூறிக்கொள்கிற டீஸ்டா செடல்வாட் எனும் மூதாட்டி அப்போதைய முதல்வர் தற்போதைய பிரதமர் மோடி மீது பழிபோடும் வகையில் அப்பாவி மக்களைக்கொண்டு பொய்யான ஆதாரங்கள் தயாரித்த வழக்கில் நேற்று முன்தினம் காவல்துறையால் அதிரடியாக கைதுசெய்யப்பட்டார். இவருக்கு 2007ல் அப்போதைய காங்கிரஸ் அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
காங்கிரஸ் சார்பில் மோடி மீது போடப்பட்ட வழக்கில் இந்த மூதாட்டி சமூக ஆர்வலர் மோடிக்கு எதிராக பொய்யான ஆவணங்களை தயாரித்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா " அவர் விருது வாப்ஸி கும்பலில் உறுப்பினராக உள்ளார். (விருதுகளை திரும்ப தருவதாக அறிவித்தவர்கள்)
பத்மஸ்ரீ விருதை டீஸ்டா ஜாவேத் செடல்வாட் போன்றோரிடமிருந்து திரும்பபெறவேண்டும். உச்சநீதிமன்றம் இத்தகையோர் கூறிய கருத்துக்கள் மற்றும் நடத்தைகளை கவனித்தே அவரை கைதுசெய்ய உத்தரவிட்டுள்ளது" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்புப்படை டீஸ்டாவை மும்பையில் பதுங்கியிருந்தபோது கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.