24 special

நான்கு மணி நேரம் நீடித்த ஆலோசனை பிரதமர் மோடி முக்கிய முடிவு...!

Modi
Modi

பிரதமர் தலைமையில் கடந்த சனிக்கிழமையன்று கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நடந்த உயர்மட்ட கூட்டத்தில், பல உயர் அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் பல மாநிலங்களில் இலவசங்கள் பற்றிய அறிவிப்புகள் நிதி ரீதியாக சமன் செய்ய முடியாதவை என்றும், பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் அரசியல் தேவைகளை சீரமைக்கும் ஒரு சமநிலையான முடிவை எடுக்க அவர்கள் வற்புறுத்தப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் விளக்கினர்.


தேர்தல்களின் போது மாநில அரசியல் கட்சிகளால் வாக்குறுதியளிக்கப்பட்ட  இலவச திட்டங்கள் குறித்து அவர்கள் எச்சரிக்கையை வெளிப்படுத்தினர்.  இந்த போக்கு நீடித்தால், சில மாநிலங்கள் பணப் பற்றாக்குறையால் இலங்கை அல்லது கிரீஸ் போன்ற அதே சூழ்நிலையில் எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் பஞ்சாப், டெல்லி, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம், தமிழ்நாடு போன்ற மாநில அரசுகளின் இலவச திட்டங்கள் செயல்படுத்த முடியாதவை பல அரசியல் கட்சிகள் இலவச மின்சாரம் வழங்கி, மாநில பட்ஜெட்டில் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன.  மேலும், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற முக்கியமான சமூகத் துறைகளுக்கு அதிக நிதிகளை வழங்குவதற்கான அவர்களின் மதிப்பை இலவசங்கள் நீர்த்து போக செய்கின்றன.

மேலும் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றப்பட்டதன் பின் விளைவுகள் குறித்து மத்திய அரசு அதிகாரிகளும் அச்சம் தெரிவித்தனர்.  ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் இலவசங்களை வழங்க அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பது வழக்கம், மாநில மற்றும் மத்திய அரசு நிதிகளுக்கு பெரும் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சில அறிக்கைகளின்படி, மத்திய அரசிற்கு செல்வதற்கு முன்பு மாநிலங்களில் முக்கிய பதவிகளை வகித்த அதிகாரத்துவத்தினர், பல மாநிலங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அவர்களுக்கு மத்திய அரசு உதவி இல்லாவிட்டால் திவாலாகிவிடும் என்றும் எச்சரித்தனர்.

சில அதிகாரிகளின் கூற்றுப்படி, சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மீது விவாதம் கவனம் செலுத்தியது, மேலும் வறுமையைக் குறைப்பதற்கும், மாநில அரசுகள் மற்றும் மையத்தில் உள்ள பரந்த அனுபவத்தின் அடிப்படையில் நிர்வாக யோசனைகளைக் கொண்டு வருவதற்கும் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு செயலாளர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார்.

ஆம் ஆத்மி கட்சி மற்றும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ், திமுக போன்ற பல அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பு டன் கணக்கில் இலவச. அறிவிப்புகளை வழங்கின.  பல அரசியல் கட்சிகள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற நோக்கில் இலவசங்களைத் தருவதற்கான வாக்குறுதிகளை அள்ளி வீசினர்.

தங்களிடம் இருப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தபின், பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசு, மாநிலத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 50,000 கோடி உதவித் தொகையை மத்திய அரசிடம் கேட்டது.

 சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில், இந்த அரசியல் கட்சிகள், வீடுகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பணம், பேருந்தில் இலவச பயணம் என பல்வேறு திட்டங்களை அறிவித்தன.

இருப்பினும், இந்தத் திட்டங்கள் சமூகத் துறையாக இருந்தாலும் சரி, அல்லது பொருளாதாரத் துறையாக இருந்தாலும் சரி முழு செயல்பாட்டிற்கு சாத்தியமில்லை.  இந்தியாவின் மின் விநியோக நிறுவனங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.  இதுபோன்ற சூழ்நிலைகளில், கடந்த கால நிலுவைத் தொகை ஏற்கனவே செலுத்தப்படாத நிலையில், இலவச மின்சாரம் வழங்குவதும், மின்துறையின் சுமையை அதிகரிப்பதும் மாநிலங்கள் திவாலான நிலைக்கு கொண்டு செல்லும்.

மாநிலங்கள் மத்திய அரசிடம் வரிகள் மற்றும் ஜிஎஸ்டியின் மூலம் வருமானத்தை பெறுகின்றன, அதே சமயம் அவற்றின் சொந்த வருவாய் வழிகள் மது, கலால் மற்றும் பெட்ரோலிய VAT, அத்துடன் சொத்து மற்றும் மோட்டார் வாகனப் பதிவுக் கட்டணங்கள் ஆகியவற்றுடன் பணத்தை பெறுகின்றன.

இதில் பலரது வருமானம் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கும், இலவச திட்டங்களுக்கும் மட்டுமே செலவழிக்க படுகிறது எனவே இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் அல்லது இதனை முறை படுத்த குழுக்கள் அமைக்க வேண்டும் என அதிகாரிகள் பிரதமரிடம் வலியுறுத்தினர். பிரதமரும் இது குறித்து முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க பிரதமர் அலுவலக செயலாளர் மற்றும் திட்டக்குழு அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் மகளிர் இலவச பேருந்து பயணம், குடும்ப தலைவிகளைக்கு மாதம் 1000, சிலிண்டர் விலையில் 100 தள்ளுபடி என இன்னும் பல இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.