24 special

முன்னாள் அமைச்சர் படுகாயம்..! ஒட்டு கேட்டு சென்றவரின் மண்டையில் ஓட்டை போட்ட பொதுமக்கள்..?

minister
minister

திரிபுரா : திரிபுராவில் மாணிக் சாஹா தலையாமையிலான பிஜேபி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாணிக் சாஹா கடந்த மாதம் தான் முதல்வராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இன்னும் சிலமாதங்களில் வரவுள்ள நிலையில் மாநிலத்தின் நான்கு தொகுதிகளில் ஜூன் 23 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.


அகர்தலா, டவுன் போர்டோவலி, சுர்மா மற்றும் ஜூபர்நகர் ஆகிய நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் ஜூன் 23 நடைபெறும் எனவும் 26 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு மாலையில் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தல் பிஜேபிக்கு மிக முக்கியம் வாய்ந்தது என கூறப்படுகிறது.

நான்கு தொகுதிகளில் விஐபி தொகுதியான அகர்தலா காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிஜேபி அமைச்சருமான சுதிப்ராய்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சுர்மா தொகுதியில் ஆஷிஷ் தாஸ் போட்டியிடுகிறார். ஐவரும் கடந்த வருடம் பிஜேபியில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரசில் இணைந்தார். பின்னர் தற்போது டிஎம்சியிலிருந்து விலகியுள்ளார்.



முன்னாள் முதல்வர் பிப்லப் குமாருக்கு பதிலாக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மாணிக் சஹாவுக்கு இது முதல் தேர்தல் என்பதால் அவர் மீது அழுத்தம் அதிகமாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய காங்கிரஸ் தலைவருமான சுதிப்ராய் பர்மன் தொகுதி மக்களால் தாக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அகர்தலா தொகுதியில் போட்டியிடும் சுதிப்ராய் உஜன் அபய் நகர் பகுதியில் காயம்பட்ட ஒரு காங்கிரஸ்தொண்டரை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றார். அபய் நகர் செல்லும்போது சுதிப்ராய்மீது மர்மநபர்கள் சிலர் மறைந்திருந்து செங்கற்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. அதையடுத்து அவரை மீட்ட காங்கிரஸ் தொண்டர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்த தாக்குதலில் அவரது காரும் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வடகிழக்கு காங்கிரஸ் பொறுப்பாளர் கூறுகையில் " வேட்பாளர்களை பயமுறுத்துவதன் மூலம் ஜனநாயகத்தை பிஜேபி படுகொலை செய்யப்பார்க்கிறது. சுதிப்ராய் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். நான் முதல்வருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருக்கிறது" என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். உஜன் அபய் நகர் பிஜேபியினர்  " இது தேர்தலுக்கான நாடகம். இந்த இடைத்தேர்தலில் வெல்ல வேண்டும் என எந்த எல்லைக்கும் காங்கிரஸ் செல்லும். அந்த பகுதியில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. மேல்தளத்திற்கு கொண்டுபோன செங்கற்கள் தவறுதலாக அவர் மீது விழுந்திருக்கலாம்" என கூறியதாக செய்திகள் உலவுகிறது.