Politics

பயிர் கடன் தள்ளுபடிக்கு கமிஷன் கேட்டு மிரட்டும் அதிமுக ஒன்றிய செயலாளர்.! முதல்வர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கண்ணீர்.!

பயிர் கடன் தள்ளுபடிக்கு கமிஷன் கேட்டு மிரட்டும் அதிமுக ஒன்றிய செயலாளர்.! முதல்வர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கண்ணீர்.!
பயிர் கடன் தள்ளுபடிக்கு கமிஷன் கேட்டு மிரட்டும் அதிமுக ஒன்றிய செயலாளர்.! முதல்வர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கண்ணீர்.!

கூட்டுறவு வங்கியில் வாங்கிய விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக கடந்த மாதம் முதல்வர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார், இது தமிழக முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது, மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூத்தியார்குண்டு கிராமத்தில் அமைந்துள்ளது கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் பெற்று தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளிடம் 3 சதவிகிதம் கமிஷன் கேட்டு மிரட்டுவது விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூத்தியார்குண்டு கிராமத்தில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கூட்டுறவு சங்க தலைவராக இருந்து வருகின்றவர் திருப்பரங்குன்றம் அதிமுக ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், இந்த கூட்டுறவு வங்கிக்கு கீழ், கருவேலம்பட்டி, தோப்பூர், வேடர் புளியங்குளம், கூத்தியார்குண்டு, மூனாண்டி பட்டி உட்பட சுமார் 7 கிராமங்களை உள்ளடக்கி இந்த கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.

இந்த கூட்டுறவு வங்கி மூலம் சுமார் 2.5 கோடி வரை விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்டுள்ளதாக கூறப்படுகிறது, சுமார் 7 கிராமகளில் வசிக்கும் விவசாயிகள் இதனால் பயனடைந்துள்ளனர், இந்நிலையில் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகளை சந்தித்து, ஒரு லட்சம் ரூபாய்க்கு மூவாயிரம் ரூபாய் கமிஷன் தர வேண்டும் என்றும், அப்படி கொடுத்தால் தான் அடுத்த முறை கூட்டுறவு வங்கியில் கடன் தரப்படும் என மறைமுக மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகள் சிலர், தற்போது இவர்கள் கேட்கும் கமிஷன் தொகையை கொடுத்தால் தான், மீண்டும் நமக்கு கடன் தொகை கிடைக்கும் என்பதால் அவர்கள் கேட்கும் கமிஷன் தொகையை கொடுத்து வருவதாகவும், மேலும் கமிஷன் தொகையினை இதுவரை கொடுக்காத பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளிடம் கமிஷன் தொகையை கேட்டு நச்சரித்து வருவதாக கூறபடுகிறது.

இந்நிலையில் முதல்வர் பழனிச்சாமி விவசாய கடன் தள்ளுபடி செய்தது எங்கள் கஷ்டத்தை போக்கி மகிழ்ச்சி அடைய செய்தது, ஆனால் தொடக்க வேளாண்மை  கூட்டுறவு சங்க தலைவராக இருக்கும் திருப்பரங்குன்றம் அதிமுக ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஒரு லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடிக்கு மூவாயிரம் ரூபாய் கமிஷன் கேட்பது மீண்டும் எங்களை கடனாளியாக மாற்றி வருவதாக கண்ணீர் மல்க கூறும் விவசாயிகள் உடனே முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனநிலையில் வெளியில் சொல்லமுடியாத வேதனையில் விவசாயிகள் இருப்பதாக கூறப்படுகிறது