Politics

ஜூன் நான்கில் தெரியும் எடப்பாடியின் முடிவு..! அரசியல் விமர்சகர் மணி கூறிய தகவல்...

Edappadi
Edappadi

2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் சசிகலா உள்ளிட்ட நால்வருக்கு தண்டனை வழங்கிய நிலையில் இபிஎஸ் எனப்படுகின்ற எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராகவும் டிடிவி தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராகவும் நியமித்து சிறைச்சென்றார். அதற்குப் பிறகு முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அப்பொழுது தூத்துக்குடியில் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர் இந்த வன்முறைக்கு தொடர்பாக பழனிச்சாமி துப்பாக்கி சூட்டை தற்காப்புக்காக என்று அறிவித்தார், அதோடு ஸ்டெர்லைட் ஆலையையும் மூட ஆணை பிறப்பித்தார்.


இருப்பினும் இவரது ஆட்சியில் குறிப்பிடத்தக்க விமர்சனங்களும் சில அவலங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தது அதனை ஒட்டி நிகழ்ந்த கொரோனா பெரும் தொற்று தமிழக மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதனால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாநிலத்தில் இருந்த 39 தொகுதிகளில் 38 தொகுதியை தனதாக்கியது. மேலும் 2021 ஆம் ஆண்டு தேர்வு அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதோடு தோல்வியையும் கொடுத்தது திமுக அதில் பெரும்பான்மையான வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்தது இதனால் அதிமுக தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. இருப்பினும் கடந்து சில வருடங்களில் அதிமுகவிற்குள்ளே பல பிரச்சனைகள் மற்றும் விரிசல்கள் சர்ச்சைகளால் கட்சி மூன்றாக பிரிந்ததோடு தற்போது தமிழகத்தில் அக்கட்சியின் செயல்பாடு என்ன என்ன செய்கிறது என்பது குறித்த செய்திகள் மங்கத்தொடங்கியது.

அதோடு இந்த போராட்டத்தில் பல நீதிமன்ற வழக்குகளை எதிர் கொண்டு தனது பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி தக்க வைத்துள்ளார். மேலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த அதிமுக கடந்த வருடங்களில் ஏற்பட்ட சில கருத்து மோதல்களால் பாஜகவின் கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. அதற்குப் பிறகு இருந்தே அதிமுகவின் நடவடிக்கைகள் அனைத்தும் தேய ஆரம்பித்ததாகவும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக யாருக்காக யாருடைய கூட்டணியில் போட்டியிடுகிறது என்பதை தெரியாமல் ஒரு குழப்ப நிலை இருந்தது! அதுமட்டுமின்றி முன்பு அதிமுக தன்னுடைய கோட்டையாக கொண்டிருந்த பல பகுதிகளில் பலசரிவுகளையும் பின்னடைவுகளையும் அதிமுக பெற்றதோடு தற்போது திமுக மற்றும் அதிமுக இரண்டும் பங்காளி கட்சிகளாக செயல்படுகின்றனர் ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றால் அவர்களது செயலை மட்டும் கவனியுங்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது அரசியல் வட்டார முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மூத்த அரசியல் விமர்சிப்பவராக உள்ள மணி அதிமுக குறித்தும் அதன் பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி குறித்தும் பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார். அதாவது இந்த தேர்தலில் முடிவுகள் எடப்பாடிக்கு எதிராக அமையும் என்பதுதான் எதிர்பார்ப்பு, ஒருவேளை அப்படி நடந்தால் அது கடந்த நான்கரை ஆண்டுகளில் எடப்பாடி சந்திக்கக்கூடிய ஒன்பதாவது தோல்வியாகிவிடும்! தற்போது 2026 ஆம் ஆண்டு தேர்தலை அவர் குறி வைக்கிறார். இந்த தேர்தலில் அவர் சிறுபான்மையினரின் வாக்குகளை கைப்பற்றி விடலாம் என்பதற்காகவே பாஜகவை விட்டு வெளியேறினார், ஒருவேளை இந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தால் 2026 வரைக்கும் எப்படி அவர் கட்சியை நடத்தப் போகிறார் என்பதே ஒரு கேள்வி குறிதான்! டெல்லியில் வலுவான ஒரு அரசு அமையும் பட்சத்தில் இங்கு எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி முற்று கிடைக்கும் என்றும் கட்சியினரிடையே தலைமை மீது இருக்கும் அதிருப்தியை காட்டிலும் நாம் தோற்றுப் போய் விடுவோம் வாக்குகள் கிடைக்காது என்பது தான் பிரதானமாக உள்ளது என்று எடப்பாடியின் முடிவு குறித்து அதிரடி தகவலை தெரிவித்துள்ளார்.