
நம் தாத்தா பாட்டி காலத்தில் பச்சை குத்துவது என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக இருந்து வந்தது. தன் தாத்தாக்களின் கைகள் மற்றும் மார்பு போன்ற இடங்களில் பச்சை குத்தி இருப்பதை நாம் பார்த்திருப்போம். மேலும் பாட்டிமார்கள் தங்கள் கைகளில் அவர்களின் கணவரின் பெயரை பச்சை குத்தி இருப்பதையும் அவர்களின் நெற்றியில் பொட்டு போன்று பச்சை குத்தி இருப்பதையும் நாம் பார்த்திருப்போம். ஏன் இது போன்ற பச்சைகளை குத்தி இருக்கிறீர்கள் என்று கேட்டால் அவர்கள் அன்பினை வெளிக்காட்டுவதற்காகவும், இறந்ததற்குப் பிறகு நம் உடலுடன் சேர்ந்து இருப்பது இந்த பச்சை குத்துவது மட்டும் தான் என்றும் பல பதில்களை கூறி வருவார்கள். அந்த காலகட்டத்தில் பச்சை குத்துவது மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வந்தது.
ஆனால் 1990 ஆம் ஆண்டுகளில் இந்த பச்சை குத்தும் பழக்கம் என்பது மிகவும் குறைவாகவும், அதிக அளவில் மக்கள் விரும்பாத ஒன்றாகவும் மாறிவிட்டது. மேலும் இதுபோன்று பச்சை குத்துவதால் நல்ல வேலை கிடைக்காமல் போய்விடும் என்றும், நாகரீகமாக இருக்க வேண்டும் என்றும் பச்சை குத்துவதை அதிக அளவு இளைஞர்களும் அப்போது விரும்பாமல் தவிர்த்து வந்தனர். ஆனால் அதன் பிறகு 2010 ஆம் ஆண்டில் இந்த பச்சை குத்தும் பழக்கம் மீண்டும் உருவெடுத்தது. ஆனால் இந்த பச்சை குத்துவது என்று இல்லாமல் அது டாட்டூ என்ற பெயரில் உருவெடுத்து வந்தது. என்னதான் டாட்டூ போன்றவை குத்துவதில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட அவர்களின் நண்பர்களின் வற்புறுத்தலாலும், நண்பர்கள் குத்துகிறார்களே என்ற ஆசையினாலும் அவர்களும் குத்திக் கொள்கின்றனர்.
பல வண்ணங்களில் உடல் முழுவதும் எந்தெந்த டிசைன்கள் வேண்டுமோ அந்த டிசைன்கள் எல்லாம் ஒரு ஒரு வண்ணத்தில் இளைஞர்கள் தங்களின் உடல் முழுக்க டாட்டுகளை அணிந்து வந்தனர். மேலும் திரையுலகத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அணிந்திருக்கும் தட்டுகளை பார்த்தும் ஒரு சிலர் இது போன்ற பாட்டுக்களை நாமும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அதிக அளவில் மோகம் கொண்டு வந்தனர். இந்த டாட்டூ அணிவதில் ஆண்களும் சரி, பெண்களும் சரி எந்தவித பின் விளைவுகளையும் யோசிக்காமல் அவர்கள் நினைக்கும் இடங்களில் வேண்டிய டிசைன்களை பார்த்துக்களாக அணிந்து மகிழ்ச்சி அடைந்து கொள்கின்றனர். ஆனால் இவ்வாறு உடலில் டாட்டூகள் அணிவதால் அவர்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என்று தெரிந்து கொள்ளாமல் டாட்டூகளை போட்டுக் கொள்கின்றனர்.
ஃபேஷனாக இருக்க வேண்டும் என்று மாடர்ன் உடைகளை அணிந்த காலம் போய் தற்போது டேட்டுகள் அணிவதுதான் பேஷன் ஆகவும், டிரெண்டாகவும் இருந்து வருகிறது. இந்த டாட்டுக்களில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு நிறங்களிலும் பல வகையான கெமிக்கல்கள் கலந்திருப்பதால் தோளில் அலர்ஜிகளை ஏற்படுத்தும் அபாயம் இருந்து வருகிறது. மேலும் டாட்டூ குத்தும் ஊசியானது ஏற்கனவே ஒருவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசியாக இருந்தால் எளிதில் நோய் பரவுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இது போன்று ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஊசியினால் டாட்டூகள் குத்தி எச்ஐவி போன்ற நோய் தொற்றுக்களால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டும் இருந்து வருகின்றனர். முதலில் டாட்டூ குத்தும் இடத்தில் உள்ள முடிகளை அகற்றி, எந்த டிசைனை குத்த வேண்டுமோ அதனை பிரிண்ட் எடுத்து உடலில் ஒட்டி முதலில் வரைபடமாக வரைந்து கொள்கின்றனர். கடைசியாக எந்த வண்ணத்தில் டாட்டூ வேண்டுமோ அதனை நிரப்பி காட்டுகளை குத்துகின்றனர். என்னதான் சிறிய டிசைனாக இருந்தாலும் கூட அதனால் தோலுக்கும், இம்முனிட்டி சிஸ்டத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய கையில் இருக்கிறது. மேலும் 6 மாத அளவிற்கு மற்ற யாருக்