24 special

இது தெரியாம தங்க நகை வாங்கி ஏமாறாதீர்கள்!! நகை வாங்கும் பொழுது கட்டாயமாக பார்க்க வேண்டிய விஷயம் இதுதான்!!!

GOLD ISSUE
GOLD ISSUE

பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் அதிக அளவில் தற்போது தங்க நகைகளை விரும்பி வருகின்றனர். நகைகளை அதிகமாக போட்டுக் கொள்பவர்கள் தான் சமுதாயத்தில் மிகவும் மதிப்பு உடையவர்கள் என்ற மனநிலையிலும் இருந்து வருகின்றனர். இன்றளவும் திருமணங்களில் தங்க நகைகள் என்பது ஒரு நீங்காத இடத்தை பெற்று தான் வருகிறது. சிலர் அவர்களின் வருமானத்திற்கு ஏற்றது போல் தங்க நகைகளை திருமணத்திற்கு செய்து வருகின்றனர். அதில் சிலர் எவ்வளவு நகை போட்டு இருக்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்கள் மிகவும் செல்வாக்கு வாய்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காகவே நிறைய நகைகளை அணிந்து கொள்கின்றனர். மணப்பெண்ணை காட்டிலும் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் நிறைய நகைகளை போட்டுக் கொள்வதை நாம் பார்க்க முடிகிறது. இன்னும் சில திருமணங்களில் மணப்பெண்ணுக்கு 100 பவுன் 200 பவுன் என்று நகைகளை கொடுக்கும் நிகழ்வுகள் இன்றும் நடந்து கொண்டு தான் உள்ளது. இதனை பார்க்கும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள் கூட அதிக அளவில் நகைகளை வாங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதற்காக சிலர் பல கடன்களை வாங்கியும் தங்க நகை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 


தங்க நகைகளை பொருத்தவரை அதனுடைய விலை என்பது தினசரி மாறும் நிலையில் இருந்து வருகிறது. அதனால் வாங்கும் விலைக்கு அதனை விற்கும் பொழுது கிடைக்கும் என்பது நிர்ணயம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. சில நகைகள் வாங்கும் பொழுது குறைவான விலைக்கு வாங்கி இருந்தாலும் அதனை விற்கும் பொழுது அதிக விலைக்கு போகும். இன்னும் சில நகைகள் வாங்கும் பொழுது அதிக விலையில் வாங்கி இருப்போம் ஆனால் விற்கும் பொழுது அன்றைய நிலவரப்படி நகையின் விலை குறைவாக இருந்தால் அந்த நகையானது குறைவாகவே விற்கப்படும். இப்படி நகைகளை வாங்கும் பொழுது அதற்காக செயற்கூலி சேதாரம் என்று தனியாக ஒரு விலையும் நிர்ணயிக்கப்பட்டு நம்மிடமிருந்து வாங்குகின்றனர். அப்படி அதிக விலை கொடுத்து வாங்கும் தங்க நகையானது நமக்கு எந்தவித கலப்படமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். ஆனால் சில நகைகளில் கலப்படம் ஏற்படுகிறது. இப்படி நகைகளை வாங்கும் பொழுது எந்த விதத்திலும் ஏமாறாமல் வாங்க வேண்டும்.

நகையலின் தன்மையை எப்படி பார்ப்பது என்பதை பற்றி தற்போது இணையத்தில் அதிகம் தேடிப்பிடித்து படிக்கின்றனர்.அது என்னவென்றால்!! நகைக் கடைகளில் 24 கேரட், 22 கேரட் தங்க நகை என்று சொல்லி வெறும் 18 கேரட் உங்க நகைகளையே விற்கின்றனர். தங்க நகைகளை வாங்குபவர்களும் அதனை ஒழுங்காக சரி பார்க்காமல் வாங்கி விடுகின்றனர். நான் வாங்கும் நகை எப்படிப்பட்டது என்று பார்க்க வேண்டும் என்றால் முதலில் நகை வாங்கும் பொழுது கொடுக்கப்படும் பில்லில் பியூரிட்டி  என்ற இடத்தில் 24 கேரக்டா அல்லது 18  கேரட்டா என்று சரி பார்க்க வேண்டும். ஒருவேளை அந்த பியூரிட்டியில் மென்ஷன் செய்யவில்லை என்றால் அந்த கடையின் மீது கன்ஸ்யூமர் கோட்டில் வழக்கு பதிவு செய்யலாம். மேலும் வாங்கும் நகையில் பி ஐ எஸ் என்று குறிக்கப்பட்டதில் ஒரு அல்பாபெட் நம்பர் ஒன்று குறிக்கப்பட்டு இருக்கும். அதனை பி ஐ எஸ் கேர் அப் சென்று அதனை  போட்டு பார்க்கும் பொழுது அதனுடைய பியூரிட்டியில் வரும் அந்த தங்க நகை பற்றிய விவரங்களும் காட்டிவிடும். இதனை பின்பற்றி தங்க நகை வாங்கும் பொழுது எந்தவித ஏமாற்றமும் இல்லாமல் சரியான தங்க நகையை வாங்க முடியும். தற்போது இது குறித்த தகவல்கள் தன இணையத்தில் அதிகமாக அனைவராலும் தேடி படிக்கப்படுகிறது....