24 special

பெண்களுக்கு இந்த துறையில் கூட வேலை இருக்கா??? புது பரிமாணத்தில் தெறிக்கவிடும் பெண்....

GOVERNMENT
GOVERNMENT

சமையலறை மட்டுமே கதி என்று கிடந்த பெண்களின் நிலைமை தற்போது அதிக அளவில் மாறிக்கொண்டே வருகிறது. உலகில் உள்ள ஒவ்வொரு துறைகளிலும் பெண்கள் சாதித்து காட்டி வருகின்றனர். முதலில் எல்லாவற்றிற்கும் பயந்து கொண்டு வெளியில் செல்லாமல் இருந்த பெண்கள் இப்போது கிடையாது. தற்போது உள்ள பெண்கள் அனைவரும் தைரியத்தையும், நம்பிக்கையையும் ஆயுதமாகக் கொண்டு வரலாற்றில் வியக்க வைக்கும் பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர். " அடுப்புதும் பெண்களுக்கு படிப்பதற்கு" என்று கேட்ட காலம் போய் தற்போது கணினி பயன்படுத்தும் துறைகள் வரை அனைத்திலும் சும்மா வெற்றி நடை போட்டு வருகின்றனர்!! அவர்கள் குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் ஏற்படும் தடைகளையும் தாண்டி சாதித்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து ஈடுபட்டு பல சாதனைகளை புரிந்து வருகின்றனர்.


விளையாட்டுத்துறை ராணுவ துறை போன்ற பல துறைகளில் தங்களின் பெரிய சாதனைகளை நிகழ்த்தி அனைவரையும் வியக்க வைத்து வருகின்றனர். இன்று சிந்தித்துப் பார்த்தால் பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெண்களின் பங்களிப்பு அனைத்து துறைகளிலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிறந்த அறிவாற்றல் மட்டும் இன்றி  துணிச்சலோடு செயல்பட்டு பெரும் பாய்ச்சலை உருவாக்கி தற்போது நம் நாட்டையும், சமூகத்தையும் சும்மா அவர்களின் குடும்ப நிலையும் முன்னேற்றி வெற்றி நடை போட்டு  முன்னே செல்கின்றனர். தற்போது இஸ்ரோ உட்பட பல விண்வெளி ஆராய்ச்சி மையங்களிலும் பெண்கள் சாதனை புரிந்து வருகின்றனர். சமீபத்தில் கூட சந்திரயான்-3, நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய 10 நாள்களில் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் அனுப்பப்பட்டது.

அதன் திட்ட இயக்குநராக தமிழகத்தின் தென்கோடியைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி வெற்றிகரமாகத் தன் பணியை நிறைவேற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெண்கள் விளையாட்டு துறையிலும் ஆண்களுக்கு நிகராக போராடி பல வெற்றிகளை கண்டு வருகின்றனர். சமீபத்தில் கூட கோவையைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் என்ற பெண் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தின் அரையிறுதியில் தங்க மங்கை பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்து மேலும் இறுதிப்போட்டியில் மூன்றாவதாக வந்து வெண்கலம் வென்றுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பல பெண்கள் அரசு துறைகளிலும் பணியாற்றி வருகின்றனர்.  மேலும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முத்தமிழ்செல்வி என்னும் பெண் சிறுவயது முதலிலே  மலை ஏறுவதில் ஆர்வம் அதிகம் கொண்டுள்ளார்.

இதை தொடர்ந்து அவர் சமீபத்தில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை புரிந்துள்ளார் என்பதை பார்க்கும்போது மிகவும் வியப்பாகவே உள்ளது.இதுபோன்ற தொடர்ந்து காவல்துறை விமானத்துறை என்று பல துறைகளில் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாததாகவே உள்ளது. ஆண்களைப் போலவே இவர்களும் தற்போது கடினமாக உழைத்து பல முன்னேற்றங்களை கண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து பெண்கள் தற்போது  பஸ் கண்டக்டர் ஆகவும் உருவெடுத்துள்ளனர். மதுரை சேர்ந்த ரம்யா என்பவர் தனது கணவர் அரசு டிரைவராக பணியாற்றி வந்த நிலையில் அவர் இறந்த பிறகு, தமிழ்நாடு அரசாங்கத்திடம் கருணை அடிப்படையில் வேலை தருமாறு மனு எழுதி இருந்தார். அதைத்தொடர்ந்து இவரின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு தற்போது  தமிழ்நாட்டிலேயே முதல் பஸ் பெண் கண்டக்டர் என சமூக வலைதளத்தில் வைரலாக உலா வருகிறார்...