Cinema

விஜய் கட்சியினால் இயக்குனர்கள் வருத்தம்..!

Vijay, Atlee
Vijay, Atlee

நடிகர் விஜய் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரக்கூடியவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு டப் கொடுத்தவர், ஜெயிலர் படத்திற்கும் லியோ படத்திற்கும் இடையே வசூலில் போட்டி நிலவியது. விஜய் சினிமாவில் தான் இருப்பார் இதனால் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர்கள் கல்லா கட்டலாம் என நினைத்தபோது விஜய் அரசியலுக்கு செல்ல போகிறேன் என சொன்ன பொது யாருக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நேற்று விஜய் தனது கட்சியின் பெயரை அறிமுகப்படுத்தினார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.


சினிமாவில் இயக்குனர் அட்லீயிடன் பைக்கில் படத்தில் நடித்த விஜய் அந்த பட ப்ரோமோஸனில் விஜயுடன் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ணுவேன். அதில் பாலிவுட் நடிகர்கள் நடிப்பார்கள் என கூறியிருந்தார். சமீபத்தில் ஜவான் படத்தை அட்லீ இயக்கியிருந்தார் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருப்பார். நயன்தாரா, ஷாருக்கான் நடிகராக நடித்த இந்தப்படம் 1000 கோடிக்கு மேல் குவிந்திருந்தது. தற்போது விஜய் அரசியல் கட்சி தொடங்கியதால் ஏற்கனவே ஒப்புகொண்டுள படத்தில் மட்டுமே நடிப்பதாக தெரிவிதித்துள்ளார் இதனால் அட்லீ இது முன்னாடியே தெரிந்திருந்தால் ஜவான் படத்தில் ஒரு கேமியோ ரோலில் விஜையை நடிக வைத்திருக்கலாம் என  யோசிக்க தொடங்கியுள்ளார்.

அட்லீயின் ஆசையில் இப்படி மண்ணை அள்ளிப் போட்டு விட்டாரே விஜய் என தற்போது அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். ஏற்கனவே விஜய் மற்றும் ஷாருக்கானை கொண்டு படத்தை இயக்க அதற்கான கதையை அட்லீ அழுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் அரசியலில் குதித்து சினிமா வாழக்கைக்கு எண்டு கார்டு போட்டுள்ளார். இதனால் அட்லீ கணவு முடிந்துவிட்டது இணை வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இவரை போல, மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் கைதி படம் மூலம் LCU கதாபாத்திரத்தை தொடங்கினார். அதன் பிறகு வெளியான விக்ரம் படத்தில் திரை பட்டாளங்கள் அனைவரையும் ஒன்றாக ஒரு படத்தில் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டு வெளியான லியோ படம் அதுவும் LCU கனக்ட்டில் இருந்ததால் சூர்யா,விஜய், ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் என பலரும் ஒரே படத்தில் பார்க்கலாம் என எதிர்பார்த்த நேரத்தில் அதிலும் விஜய் மண்ணைவாரி போட்டு விட்டார் என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். அப்போ ரோலக்ஸுக்கும் லியோவுக்கும் சண்டை நடக்காதா? என ரசிகர்கள் ரொம்பவே கடுப்பாகி உள்ளனர்.

என்னதான் விஜய் 2026ஐ குறிவைத்து செயல்பட்டாலும் விஜய் முதல்வராக வர சுமார் 10 வருடம் ஆகும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர், விஜய் இரண்டு ஆண்டில் அரசியல் வாழ்கை சலுப்பு அடைந்துவிட்டால் மீண்டும் விஜய் நடிக்க வந்து விடுவார் என்றும் கூறுகின்றனர். ஆனால், ரசிகர்கள் அப்படியெல்லாம் எங்கள் அண்ணனை விட்டு கொடுக்கமாட்டோம் நிச்சயமா சிஎம் ஆக்குவோம் என உறுதியாக இருந்து வருகின்றனர்.  விஜய் அரசியலில் தாக்கு பிடிப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.