Tamilnadu

2G வழக்கு தொடர்பாக வினோத்ராய் மன்னிப்பு கேட்டாரா? திமுகவினருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி!

vinodray
vinodray

உலகை உலுக்கிய 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு நாளுக்கு நாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் தலைக்கு மேல் கத்தியாக நிற்கும் சூழலில் தற்போது கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.


அதில் 2ஜி வழக்கு குறித்து தவறான தகவல் அளித்ததற்காக மன்னிப்பு கோரினார் முன்னாள் சிஎஜி தலைவர் வினோத் ராய் என்று மட்டும் போட்டு இருந்தனர் ஆனால் அவர் எதிர்காக மன்னிப்பு கோரினார் என்ற தகவலை அந்த குறிப்பில் சொல்லாமல் மொட்டையாக மன்னிப்பு கோரினார் என்று மட்டும் இருந்தது.

இதை பார்த்த திமுகவினர் பலர் நீதி வென்றது நியாயம் வென்றது என, 2ஜி வழக்கில் வினோத் ராய் கொடுத்த தகவலே தவறு என்பது போல் பேசும் சூழலில் உண்மையில் என்ன நடந்தது என பார்க்கலாம் :-2G வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயரை சேர்க்க கூடாது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு அழுத்தம் கொடுத்தார்கள் என வினோத் ராய் பேட்டி ஒன்றில் கூறினார் அதில்  பத்திரிகையாளர்கள் பெயர் கேட்டபோது,

மூன்று நான்கு எம்.பி-கள் அவங்க பெயர்களை அஸ்வினி குமார், சஞ்சய் தீக்ஷித் னு வரிசையா சொல்லும் போது, சஞ்சய் நிருபம் என்கிற காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெயரையும் தெரிவித்தார்.இந்த நிலையில் சஞ்சய் நிருபம் தான் வினோத் ராயை மிரட்டவில்லை எனவும் எனது பெயரை தவறாக குறிப்பிட்டார் எனவும் அவதூறு வழக்கு தொடர்ந்தார் , சஞ்சய் நிருபம் தொடர்ந்த அவதூறு வழக்கில்தான்  வினோத் ராய் மண்ணிப்பு கேட்டிருகார்.. லிஸ்ட்ல இருந்த மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அவதூறு வழக்கு போடல, நாங்க அப்படி மிரட்டவில்லை எனவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை இப்படி இருக்க, சில தமிழக ஊடகங்களும், கட்சி சார்ந்த நபர்களும் உண்மை என்னவென்றே தெரியாமல் பரப்பி வருகின்றனர், வினோத் ராய் செய்தியை பகிர்ந்து வரும் நபர்களுக்கு திமுகவினருக்கு உண்மையான தகவல் அதிர்ச்சியை அளித்துள்ள சூழலில், விரைவில் 2ஜி வழக்கு மேல் விசாரணை தொடங்க இருக்கின்றன என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.