sports

மாபெரும் அதிர்ச்சி ! கிரிக்கெட் பிளேயர் ஷமி விஷயத்தில் நடந்த கோல்மால் வெளிச்சத்திற்கு வந்தது !

Cricket
Cricket

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக்கோப்பை கடந்த 24ஆம் தேதி துபாயில் நடந்தது. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. அதாவது ஐசிசி உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் ஒரு முறை கூட இந்தியாவை வென்றது இல்லை என்பதுதான் சிறப்பு.


அதனால் இந்தமுறை மிகத்தீவிரமாக விளையாடினார்கள் பாகிஸ்தான் வீரர்கள். அதனால் வெற்றியும் பெற்றார்கள். இந்த வெற்றியை வைத்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட விஷமத்தன்மை குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

நடந்து முடிந்த ஆட்டத்தில், இந்தியா 151 ரன்கள் எடுத்து குவித்து இருந்தது. 152 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்த சமயத்தில் 17.5 ஓவரில் 152 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது பாகிஸ்தான். இதில் குறிப்பாக இந்தியா தரப்பில் இருந்து பந்து வீசிய ஷமி 3.5 ஓவர்களில் 43 ரன்களை எடுக்க வைத்து விட்டார்.

அதன்பிறகு மும்மது ஷமிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அவரை பாகிஸ்தானுக்கு செல்லுமாறும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் சிலரால் பதிவு செய்யப்பட்டது. மேலும் மத ரீதியிலான விமர்சனங்களையும் அடையாளம் தெரியாத நபர்கள் வைத்தார்கள் 

ஆனால் இந்திய வீரர்கள் விட்டுக்கொடுக்காமல், முகமது ஷமிக்கு ஆதரவு தெரிவித்தனர். காரணம் மிக மிக சிறந்த பந்துவீச்சாளர் ஷமி. இவருக்கு ஆதரவாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் தலைவர் முகமது அசாருதீன் ஆதரவு தெரிவித்து இருந்தார். அதில், விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜமானது; ஷமி மீதான தனிப்பட்ட தாக்குதல் தேவையில்லாத ஒன்று என குறிப்பிட்டிருந்தார் அசாருதீன்.

அதேபோன்று சச்சினும் ஷமி ஓர் உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். மிக சிறந்த விளையாட்டு வீரர் . ஆனால் அந்த நாள் அவருக்காக அமையவில்லை. இது அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் நடப்பதுதான் என குறிப்பிட்டிருந்தார். மேலும் ஹர்பஜன் சிங், விரேந்திர சேவாக் ,இர்பான் பதான் ஆகியோரும் ஆதரவை வெளிப்படுத்தினர். 

ஷமியை பொறுத்தவரை சர்வதேச அளவில் எடுத்துக் கொண்டாலும் 355 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கிறார். அவ்வளவு ஏன் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் 7 போட்டிகளில் 61 ஓவர்களை வீசி 294 ரன்களைக் கொடுத்து 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அப்போது உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஷமி 9 ஓவர்களை வீசி வெறும் 35 ரன்களை கொடுத்து. அப்போது தான் ஷாகித் அப்ரிடி, யூனிஸ்கான் உட்பட 4 விக்கெட்டுகளையும் எடுத்தார். 

2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்களின் வரிசையில் நான்காவது இடத்தை பிடித்திருந்தார் ஷமி. அதே போன்று இந்தி வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார். 2001 ஐபிஎல் போட்டியிலும் 14 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி 5வது இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 நிலைமை இப்படி இருக்க பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரசீத் முகமத், சமூக வலைத்தளத்தை மிக பெரிய ஆயுதமாக்கி இந்தியர் மீதான வெறுப்புணர்ச்சியை கக்கி உள்ளார்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே ஒரு விதமான பிளவை ஏற்படுத்தவும், ஒரு பதற்றத்தை ஏற்படுத்தவும் இந்திய முஸ்லிம்கள் தேசபக்தியின் மீது ஒரு சந்தேகப் பார்வையை உருவாக்கவும்.

 இந்த வெற்றியை பாகிஸ்தான் மட்டுமல்ல இந்தியா உட்பட அனைத்து முஸ்லிம்களும் கொண்டாடுங்கள். இது முஸ்லிம்கள்களுக்கான கொண்டாட்டம் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாத்தின் வெற்றி என குறிப்பிட்டிருக்கிறார்.

அப்போது தான் முகமது ஷமிக்கு எதிராக எழுப்பப்பட்ட அனைத்தும் பாகிஸ்தான் சேர்ந்தவர்களை செய்திருக்கின்றனர். இன்னும் பிற பாகிஸ்தானிலுள்ள ஏஜென்சிஸ் ட்வீட் செய்து இருக்கின்றார்கள் சமூக வலைத்தளத்தில் மத ரீதியிலான  பிரிவினையை ஏற்படுத்தி ங்களுக்கு சாதகமாக செயல்பட்டு இருக்கு பாகிஸ்தான் என தகவல்கள் கிடைத்தன.

இதில் இன்னும் குறிப்பா சொல்லனும்னா. alitaza என்ற பெயரில் 28 ட்வீட் ஷமிக்கு எதிராக பதிவு செய்துள்ளான். அந்த குறிப்பிட்ட நபர் 15 பேரை பாலோ செய்வதால், அந்த 15 பேரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தான். இன்னும் ஒருசில அக்கவுண்ட்ஸ் இல் இருந்து, "இந்தியாவில் சகிப்புத்தன்மை கிடையாது" னு பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளனர் என பிரபல தனியார் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

 இன்னும் சில ட்விட்டர் அக்கௌன்ட் வந்த வேலையை முடித்து விட்டு அசவுண்டை டி அக்டிவேட்ட் செய்து .இருக்காங்க எனவும் பாகிஸ்தான் அணியின் வெற்றியை இந்தியாவில் கொண்டாடிய நபர்கள் மீது இந்திய மக்கள் கொந்தளிப்பில் உள்ள சூழலில் அதனை மறைக்க பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் ஷமி மீது தாங்களே விமர்சனத்தை முன்வைத்து இந்தியர்களை திசை திருப்பியுள்ளனர் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.