Tamilnadu

"டெல்லி க்ரீன் சிக்னல்" ஆட்டத்தை. தொடங்கிய அண்ணாமலை அடுத்தது அலுவலகம் தான்..!

IMage and video  Credit - junior vikatan
IMage and video Credit - junior vikatan

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஒரு வாரம் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார், பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்து விட்டு தமிழகம் திரும்பினார், தமிழகம் திரும்பிய கையோடு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பாஜக குறித்து பேசியதற்கும், தமிழ் மொழி மீதான திமுகவின் இரட்டை வேடம் குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் பதில் கொடுத்தார் மேலும் பெட்ரோல் டீசல் விலை பாஜக ஆளுகின்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது முதலில் அதை குறைக்க சொல்லுங்கள் என அண்ணாமலை பதில் கொடுத்தார்.


இந்த சூழலில்  ஆலாந்துறை அடுத்த பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பா.ஜ.க ,கவுன்சிலர் பிரதமர் மோடியின் படத்தை வைத்தார், உள்ளாட்சிக்கு அதிக நிதி மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது மேலும் பிரதமர் படத்தை அரசு அலுவலகங்களில் வைக்கவேண்டும் என்ற சட்டமும் இருக்கிறது என விளக்கம் கொடுத்தனர்.இந்த சூழலில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆலாந்துறை போலீசார் பிரதமர் புகைப்படத்தை வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 இந்த சூழலில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள கோவை வந்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கோல்டு வின்ஸ் பகுதியில், துரைசாமி நகரில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று, அங்கிருந்த மக்களிடம், ரேஷன் கார்டு தாரர்களுக்கு, மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

அப்போது ரேஷன் கடையின் உள்ளே சென்ற அண்ணாமலை, அங்கு, முதல்வர் ஸ்டாலின் படத்துக்கு அருகில், பிரதமர் மோடியின் படத்தை மாட்டினார், ரேஷன் கடைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது மத்திய அரசுதான் எனவும் கொரோனா காலத்தில் இலவச ரேஷன் வழங்கியது முதல் அனைத்துமே பிரதமர் செய்தது எனவே இங்கு பிரதமர் படத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் வேண்டும் என பாஜகவினர் குறிப்பிட்டுள்ளனர்.

டெல்லியில் அண்ணாமலைக்கு க்ரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளதாம், மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்த எந்த முயற்சியில் வேண்டுமானாலும் இறங்கலாம் எனவும் நம்பிக்கை கொடுத்துள்ளனராம், இதையடுத்துதான் அண்ணாமலை நேரடியாக களத்தில் இறங்கி பிரதமர் புகைப்படத்தை ரேஷன் கடைகளில் மாட்டியுள்ளனராம். இனி அடுத்து அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை இடம்பெற பாஜகவினர் அனைத்து முயற்சிகளையும் பாஜக எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.