24 special

அண்ணாமலையை விமர்சனம் செய்த திமுக... கடைசியில் இப்படி ஆச்சே..!

Annamalai, Stalin
Annamalai, Stalin

விரைவில் தொடங்க இருக்கும் லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தை தமிழகத்தில் உள்ள கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர். இதில் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். திமுகவினர் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்து வந்தனர் அதிலும் ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று விமர்சனம் செய்து வந்தநிலையில் தற்போது அதுவே திமுகவுக்கு எதிராக அரங்கேறியுள்ளது.


தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு திமுகவால் இருந்து செந்தில் பாலாஜி ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று தொடர் பேச்சாக பேசி வந்தார். தொடர்ட்னது திமுகவில் உள்ள நண்டு சிண்டு எல்லாம் இதையே விமர்சனம் செய்து வந்தனர் இதற்கான விளைவுகளையும் சந்தித்து வரும் நிலையில், நாடளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிக்கப்பட்டார் திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் மற்றும் அதிமுக சார்பாக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். அண்ணாமலை பெயர் அறிவித்ததும் தமிழக தொழில்துறை அமைச்சரும், திமுக ஐடி விங் தலைவருமான டிஆர்பி ராஜா மேடையில் அண்ணாமலை குறித்து பேசும்போது ஆட்டை பிரியாணி போட்டு விடலாம் என்று கூறியது பல எதிர்ப்புகள் திரும்பிய நிலையில் தபோது தன் வினை தன்னை சுடும் என்பது போல் திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதாவது, இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்  மருதமலை முருகன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் தமிழக தொழில்துறை அமைச்சரும், திமுக ஐடி விங் தலைவருமான டிஆர்பி ராஜா கலந்துகொண்டார். அப்போது அவரிடம் திமுக நிர்வாகிகள் ஆட்டுக்குட்டி ஒன்றை கொடுத்தனர். அப்போது ஒருவர் சுவையான ஆடு பிரியாணிக்கு தயார் என்றும் ஆட்டை வெட்டி விடலாம் என்பது போல் முணுமுணுத்தார். இதற்க்கு டிஆர்பி ராஜாவும் சிரித்தபடியே சென்றார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி தொடர்ச்சியாக அண்ணாமலை மட்டுமின்றி இந்த செயல் விவாயிகள் மற்றும் ஆடு, மாடு பேய்க்கும் ஏழை குடும்பத்தை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக திமுக மீது அதிருப்தி உண்டாகியிருக்கு என்று பலரும் திமுகவை சேர்ந்தவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக இப்போதும் அதுவும் கோவிலில் நின்றுகொண்டு ஆடு பிரியாணி என்றும் கோவிலில் உள்ள ஆட்டு குட்டியை கையில் எடுத்து கொண்டு பேசியதும் மேலும் விவசாயிகளிடமும் அனைத்து தரப்பு மக்களிடமும் கோவத்தை அதிகரித்துள்ளது.

ஆரம்பத்தில் அண்ணாமையை விமர்சித்தது கைதட்டும் விவாதமாக திமுகவினர் எடுத்து கொண்டாலும் இப்பொது அப்படியே மாறிவிட்டது. எதிர்கட்சிகளும் ஆளும் கட்சிகளும் விமர்சனம் செய்வது இயல்பானது. ஆனால், யாரும் ஒரு சமூகத்தையோ அல்லது அவர்கள் செய்த தொழிலையோ விமர்சனம் செய்வது இல்லை. இந்த சூழ்நிலையில் திமுக ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் ஏழை விவசாயிகளையும் விமர்சனம் செய்வதால் விமசாயிகள் தற்போது பாஜக பக்கம் திரும்பியுள்ளனர். இது திமுகவுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. விளையாட்டு தனமாக செய்தது இப்பொது வினையாக வந்து விட்டது என்று அரிசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. கோவி தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செந்திலாபாலாஜியின் பரிந்துரையில் அறிவிக்கப்பட்டார் என்று  தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.