24 special

இளைஞர்களை திமுக ஏமாற்ற முடியாது... வரிந்து கட்டிய அண்ணாமலை..!

Annamalai, Stalin
Annamalai, Stalin

தமிழக பாஜக தலைவரும் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தீவிரம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திராவிட கட்சிகளை ஓட ஓட விரட்ட வேண்டும் என்றும் அனல் பறக்கும் பிரச்சாரமாக தொடங்கியுள்ளார் அண்ணாமலை. அதேபோல் தேர்தல் வாக்குறுதியில் திமுக புதிய அறிவிப்பு ஒன்று அறிவித்துள்தற்கு அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.


                                                                                                       

லோக்சபா தேர்தல் தொடங்க சரியாக இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் வேட்பாளர்கள் அளிக்கும் வெயிலில் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். மாநிலம் முழுவதும் தனது கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவரை தற்போது கோவை பாராளுமன்றத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, வாக்காளர்கள் மத்தியில் அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இருக்கிறீர்கள். பெண்கள் பாதுகாப்பை பற்றி சிந்திக்கிறார்கள். தொழில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேன்டும் என்று ஆண்கள் சிந்திக்கிறார்கள். 

                                                                                         

சிலர் கான்கிரீட் வீடு கிடைக்குமா? குடிநீர் கிடைக்குமா ? என சிந்திக்கிறார்கள். எல்லோரும் வெவ்வேறு சிந்தனையோடு இருக்கிறார்கள். அனைவரின் எண்ண ஓட்டத்தையும் சரி செய்வோம். கஞ்சா நம் வீட்டுக்கு வீதிக்கு வரக்கூடாது. 100 சதவீதம் பணத்தை மத்திய அரசு கொடுத்தும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்காமல் திராவிட அரசு உள்ளது. குடிநீர் திட்டம் 100 சதவீதம் மத்திய அரசு திட்டம். பிரதமர் மோடி இலவசமாக கொடுக்கக்கூடிய திட்டத்தை இங்குள்ள கும்பல் சுரண்டுகிறது. ஏழைகளின் ரத்தத்தை சுரண்டி ஏழையாக வைத்திருக்கிறார்கள். அவர்களை ஓடஓட விரட்ட வேண்டும். இதற்கான மாற்றத்தை கொடுக்க உங்கள் வீட்டுப்பிள்ளையாகிய என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். 

                                                                                             

நம் பணி பூர்த்தியாகவில்லை. இன்னும் 5 ஆண்டுகள் மோடி வர வேண்டும் என்று மக்களிடம் பிரச்சாரம் செய்தார். மேலும், இங்கிருந்து எம்.பி.யாக சென்றவர்கள் பாராளுமன்றத்தில் மவுனம் காத்து தற்போது திரும்பி வந்திருக்கிறார்கள். நான் தமிழகம் முழுவதும் நடந்து சென்று வந்து விட்டேன் ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் நான் மாற்றி காட்டுகிறேன் என இவ்வாறு பிரச்சாரத்தில் பேசினார். இது முழுக்க முழுக்க திமுக கட்சியை மையப்படுத்தி தான் அண்ணாமலை பேசினார் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.

                                                                                            

அதேபோல் இன்று தேர்தல் அறிகையில் புதியதாக ஒன்றை சேர்த்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில், கோவை பகுதியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை போன்று கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில் அதற்கு மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் என்பது நகைச்சுவையாக கருதப்பட வேண்டியது. கோவையில் 3 ஆண்டுகளாக திமுகவால் ஒரு பேருந்து நிலையமே அமைக்க முடியவில்லை. திமுகவின் தேர்தல் வித்தைகளால் இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்களை ஏமாற்ற முடியாது. என தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி மீது மக்களிடம் எதிர்ப்பு உள்ள நிலையில் புதுசு புதுசாக திட்டத்தை கூறி வருகிறது ஆனால், மக்கள் மாற்றத்தைநோக்கி பயணிக்க உள்ளனர் என களத்தில் தெரியவருகிறது.