Politics

சென்ட்ரல் விஸ்டாவும் போலிகாந்திகளின் சுடுகாடுகளும்...!

central vista
central vista

சென்ட்ரல் விஸ்டாவும் போலிகாந்திகளின் சுடுகாடுகளும்...!


ஜவஹர்லால் நேருவின் ஷாந்தி வன நினைவிடத்தின் பரப்பளவு 52.6 ஏக்கர்.அதாவது மகாத்மா காந்தியின் நினைவிடத்தை விட பத்து ஏக்கர் அதிகம்.ஜவஹர்லாலை விட மகாத்மா சிறந்தவரா என்ன..!? இந்திராவின் நினைவிடமான ஷக்தி ஸ்தல் பரப்பளவு 45 ஏக்கர்கள்.ராஜீவ்காந்தியின் நினைவிடம் வீர் பூமி.இதுவும் 15 எக்கர்கள். (ஸ்ரீ பெரும்புதூர் நினைவிடம் நீங்கலாக) சஞ்சய் காந்தி நினைவிடம் சுமார் 10-13 ஏக்கர்கள்.ஆக மொத்தம் இந்த காந்தி குடும்ப நினைவிடங்களின் மொத்த கொள்ளளவு தோராயமாக 180 ஏக்கர்கள். அதுவும் டெல்லி யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள ராஜ்காட்டில்.

இன்றைய சந்தை மதிப்பு ஒரு ஏக்கருக்கு சராசரியாக 30 கோடி. அப்படி எனில் மொத்த நினைவிடங்களின் மதிப்பை அறிவார்ந்த சமூகம் கணக்கிட்டு தெரிந்து கொள்ளட்டும்.இந்த காந்தி குடும்பம் சென்ட்ரல் விஸ்டா வை பிரதமர் மோடியின் வீடு என்று வாய்கூசாமல் சொல்வதற்கு பல தலைசுற்றும் காரணங்கள் உண்டு.சென்ட்ரல் விஸ்டா ப்ராஜெக்ட்டின் மொத்த மதிப்பு சுமார் 971 கோடி. அதாவது நேருவின் நினைவிடத்தின் சந்தை மதிப்பை விட குறைவு.சென்ட்ரல் விஸ்டாவின் மொத்த பரப்பளவு 86.1 ஏக்கர் மட்டுமே.தற்போதைய பாராளுமன்றம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு மோசமான நிலையில் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

பல அமைச்சகங்கள் தனித்தனி கட்டிடங்களிலேயே செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடங்களுக்கான வாடகைத் தொகை மட்டுமே சில நூறு கோடிகளை தாண்டும்.இந்த கட்டிடங்களின் நேரடி உரிமையாளராகவோ இல்லை பினாமியாகவோ காந்தி குடும்பம் இருக்கிறது. இதனை ஒரு முறை மறைந்த முன்னாள் பிரதமரே மனம் வெதும்பி பத்திரிகையாளர் சந்திப்பில் புலம்பிய கதையும் உண்டு.இந்த புதிய பாராளுமன்றம் அமைவதினால் ஒவ்வொரு அமைச்சகங்களுக்கும் தனித்தனி வாடகை மின்சார செலவு என இல்லாமல் ஒரே பாராளுமன்ற வளாகத்தில் அமைவதால் பலவகையில் மக்கள் வரிப்பணம் சேமிக்கப்படும்.இதனால் காந்தி குடும்ப வருமானம் பெரிதும் பாதிக்கப்படும்.

ஏனெனில் பல அமைச்சகங்களும் அரசு அலுவலகங்களும் போலிகாந்தி குடும்ப கட்டிடங்களிலேயே செயல்பட்டு வருகிறது.தங்கள் குடும்ப வருமானத்திற்கு ஏதேனும் தீங்கு வந்தால் காங்கிரஸ் கைகட்டி பார்த்துக் கொண்டு இருக்குமா என்ன..!?ஏதோ மோடியின் பெயரில் பட்டா போட்டு பதிவு செய்தது போல் காங்கிரஸின் கபடநாடகம்..இதற்கு தமிழக தறுதலை கட்சிகளின் ஒயிலாட்டம் வேறு.புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் சொந்தக்காரராக பாரதபிரதமர் மோடி தன் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொள்ளவில்லை.. தேவையற்ற செலவுகளை குறைக்கும் வகையில் எடுக்கப்பட்ட பாராட்டத் தகுந்த நடவடிக்கை இதுவாகும் என ஜெகன் மோகன் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

... உங்கள் பீமா