Tamilnadu

#BREAKING இந்தியர்களை பிடித்து வைத்திருக்கும் உக்ரைன் அதிரடி திருப்பம் அடுத்தது என்ன?

Ukraine and russia
Ukraine and russia

இந்தியர்களை பிணைய கைதிகளாக உக்ரைன் பிடித்து வைத்து இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகி இருக்கும் சூழலில் உக்ரைன் நாட்டிற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த சம்பவம் குறித்து செல்வநாயகம் பகிர்ந்த தகவல் பின்வருமாறு :-


இந்தியர்கள் இருந்தால் ரஷ்யா நம்மை தாக்காது என்ற காரணத்தால், இந்திய மாணவர்களை கேடயமாக பயன்படுத்துகிறது கேடுகெட்ட உக்ரைன்!சென்ற வாரம்: ஐ.நா சபை வாக்கெடுப்பில் உக்ரைன் தூதுவர் பேசும் போது, "உங்கள் பிரஜைகளின் பாதுகாப்புக்காக எங்களை ஆதரித்து வாக்களியுங்கள்" என்று கூறினார் -

இந்தியாவை நேரடியாக குறிப்பிடாமல். இந்தியா வாக்களிக்கவில்லை. அதன் பிறகு, இந்தியர்கள் உக்ரைன் மக்களின் இனவெறி தாக்குதலுக்கு ஆளானார்கள் என்பது செய்தி.நேற்று: உக்ரைனின் கார்க்கிவ் பகுதியை தாக்கிப் பிடிக்க முடிவெடுத்த புட்டின், பிரதமர் மோதி ஜியுடன் பேசி, "உங்கள் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துங்கள்.

அவர்கள் ரஷ்யாவுக்குள் வந்தால், நாங்களே அவர்களை இந்தியா அனுப்பி வைக்கிறோம்" என்றார். ஆறு மணி நேர அவகாசம் கொடுத்தார் புட்டின். இந்தியாவும் அவசர அவசரமாக அவர்களை வெளியேற்றியது. என்றாலும், முன்னூறுக்கும் மேற்பட்ட இந்தியர்களை பிடித்து வைத்துள்ளது உக்ரைன் - அவர்களை கேடயமாக காட்டினால் ரஷ்யா தாக்காது என்ற எண்ணத்தில். 


மாணவர்களை கேடயமாக பிடிக்கும் உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி போல ஒரு கீழ்த்தரமான அரசியல்வாதியை பார்க்க முடியுமா என்பது தெரியவில்லை. தன் இராணுவத்தைக் கொண்டு ரஷ்யாவை எதிர்கொள்ளாமல், சிறையிலிருந்த கைதிகளை விடுவித்து, அவர்களிடம் துப்பாக்கிகளை கொடுத்திருக்கிறார் செலன்ஸ்கி.

அவர்கள் ரஷ்யாவை மோதாமல், உக்ரைன் கடைகளில் திருடுகிறார்கள், பாலியல் பலாத்காரம் செய்கீறார்கள், கொலை - கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்! இன்று: ஐ.நா சபையில் இன்றும் வாக்கெடுப்பு. அதில் 35 நாடுகள் வாக்களிக்கவில்லை (Abstain). என்ன கருமத்திற்காக இவர்கள் வாக்கெடுப்பு நடத்துகிறார்கள் என்பது புரியாத புதிர் - ஏனென்றால், ரஷ்யா தன் வீட்டோவை வைத்து அதை நிராகரிக்கப் போகிறது. வாக்கெடுப்பு வீணான செயல். 

அமெரிக்காவும் ஐரோப்பாவும் சண்டையில் இறங்க தயாராயில்லை. அவர்களது - சி.ஐ.ஏ கைப்பாவை - செலன்ஸ்கி & அமைச்சர்களைக் கொண்டு காய்களை நகர்த்துகிறது (கேஜ்ரிவால் - சிசோடியாவோடு ஒப்பிடவும்). ரஷ்யா விடுவதாகத் தெரியவில்லை. பலர் இருதரப்பிலும்  உயிரிழந்துள்ளனர். 

டான்பாஸ் உள்ளிட்ட கிழக்குப் பகுதியை உக்ரைன் பிடியிலிருந்து விடுவிப்பதோடு நிறுத்தியிருக்கலாம் புட்டின். அவர் நோக்கம் உக்ரைன் முழுவதையும் விழுங்குவதாக தெரிகிறது. புட்டின் செயலுக்கு ஆதரவு கொடுக்க இயலாது என்றாலும், உக்ரைன் நம் எதிரி போல நடந்து கொள்வது துரதிருஷ்டம். 

இதில் கருத்தில் கொள்ள வேண்டியது: கிழக்கு உக்ரைனில் ரஷ்ய மொழி பேசுகிறார்கள், ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிரிஸ்தவர்கள், தங்களை ரஷ்யர்களாக கருதுபவர்கள். மேற்கு உக்ரைனில் உக்ரைன் பாஷை பேசுகிறார்கள், ரோமன் கத்தோலிக்கர்கள் - யூதர்கள், தங்களை ஐரோப்பியர்களாக கருதுபவர்கள். 

தங்களை ஐரோப்பியர்களாக நினைப்பதால், அவர்கள் பார்வையில், மற்ற - ரஷ்யா, இந்தியா -  எல்லாம் தாழ்ந்தவர்களாக தெரிகிறார்கள். என குறிப்பிட்டுள்ளார்.

More Watch Videos