Cinema

#BREAKING பாதிரியாருக்கு இந்து தலித் என சான்று கொடுத்த மாவட்ட ஆட்சியர் பதவி பறிபோகிறது..? வேலை செய்ய தொடங்கிய ருத்ர தாண்டவம் திரைப்படம்

Real life Rudrathandavam
Real life Rudrathandavam

ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி கடும் பரபரப்பை உண்டாக்கியது, மதம் மாறிய ஒருவர் தலித் சமூகத்திற்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை அனுபவிக்க முடியாது எனவும் இதை சட்டம் சொல்வதாக முக்கிய செய்தியை வெளிப்படுத்தியது. இந்த படம் வெளிவரும் போது பல உண்மை சம்பவங்கள் வெளி உலகிற்கு தெரிய வரலாம் என கூறப்பட்டது.


ஆனால் இதன் முன்னோட்டமாக தற்போது ஆந்திர மாநிலத்தில் மிக முக்கிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது, ஆந்திர மாநிலம் குண்டுர் பகுதியில் பாதிரியார் தொழில் நடத்தி வருபவர் சுரேஷ்குமார் மற்றும் அவரது மனைவி ஸ்டெல்லா, இவர்கள் பைபிள் கல்லூரி, பெரிய சர்ச் போன்றவற்றை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் தாங்கள் மதம் மரியாதை மறைத்து சட்டத்திற்கு புறம்பான முறையில் தான் ஒரு இந்து பட்டியல் வகுப்பை (SC) சேர்ந்தவர் என்று அரசாங்கத்திடம் சான்றிதழ் பெற்று வெளிநாடுகளில் இருந்து பல கோடி பணம் பெற்றுள்ளார், அதே நேரத்தில் இந்தியாவிலும் சட்டத்தின் மூலம் பாதுகாப்பை பெற்றுள்ளார்.

தனியார் அமைப்பு ஒன்று சுரேஷ்குமார் இந்து அல்ல அவர் கிறிஸ்தவ பாதிரியார் எனவும் இந்து சமயத்தை பின்பன்றுகிற பட்டியல் சமுதாய மக்களின் உரிமையை  தவறான முறையில் சுரேஷ் குமார் குடும்பம் அனுபவித்து வருவதாக ஆதாரங்களுடன் தேசியம் பட்டியல் இன ஆணையத்தில் புகார் அளித்தது.

இந்த புகாரின் மேல் நடவடிக்கைக்காக தற்போது உள்துறை அமைச்சகத்திடம், இந்த புகார் சென்றுள்ளது, இதில் அப்பட்டமாக சுரேஷ்குமார் மற்றும் அவரது குடும்பம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளது தெரிந்தும், அவருக்கு இந்து பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர் என மாவட்ட ஆட்சியர் சான்று வழங்கியது ஏன் என்ற விசாரணை கோரப்பட்டுள்ளது.

இதில் பல உண்மைகள் வெளிவந்துள்ளது எனவும், மதம் மாற்றத்திற்கு தாங்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற அடையாளத்தை சுரேஸ்குமார் பயன்படுத்தி இந்து மதத்தை சேர்ந்தவர்களை மதம் மாற்றவும் அதே நேரத்தில் இந்திய சட்டத்தில் இருந்து தப்பிக்கவும் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

உச்ச நீதிமன்றம் இது போன்ற வழக்கு ஒன்றில் பட்டியல் சமூகத்தில்(sc)  இருந்து கிறிஸ்தவ, இஸ்லாமிய போன்ற வெளிநாட்டு மதங்களுக்கு மாறுபவர்கள், அல்லது பின்பற்றுபவர்கள் SC என்ற அடையாளத்தை பயன்படுத்த கூடாது எனவும் பட்டியல் சமூகத்தின் சலுகைகள் இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சேரும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதன் மூலம் பள்ளி, கல்லூரி, அரசு வேலை வாய்ப்பு, PCR சட்ட பாதுகாப்பு என எதுவும் மதம் மாறியவர்களுக்கு பொருந்தாது, அவ்வாறு அவர்கள் போலியாக சான்றிதழ் பெற்று இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் 100% உறுதி செய்துள்ளது, எனவே இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் பல்வேறு முன் மாதிரி வழக்குகளை காரணம் காட்டி கிறிஸ்தவ பாதிரியாருக்கு இந்து என போலியாக சான்று வழங்கிய மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற அரசு அதிகாரிகள் மீது மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குண்டுர் மாவட்ட ஆட்சியர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை நாட்டில் பல்வேறு போலி சான்றிதழ்கள் கொடுத்த கொடுக்க நினைக்கும் அதிகாரிகளுக்கு மறக்க முடியாத சம்பவமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.