24 special

சனாதனத்தை கையில்யெடுக்கும் பாஜக.. இண்டியா கூட்டணிக்கு முழுக்கு போட்ட ஸ்டாலின்..?

Stalin, INDIA Alliance
Stalin, INDIA Alliance

நாடு முழுவதும் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி கட்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்யவில்லை என்பது பேசு பொருளாக மாறியது. இதற்கு காரணம் திமுகவின் செயல்களே என்று சொல்லப்படுகிறது.


தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பொதுக்கூட்டம் நடத்தினார். இந்த நிலையில், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதற்காக ஸ்டாலின் அவர்கள் அண்டைமாநிலமான கேரளா கூட சென்று பிரசாரம் செய்யவில்லை. அதற்கு காரணமாக கூறப்படுவது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் அங்கு எதிர் எதிர் கட்சிகளாக உள்ளது அதன் காரணமாக ஸ்டாலின் செல்லவில்லை என கூறப்பட்டது.

இந்தசூழ்நிலையில், ஸ்டாலின் அவர்கள் இந்தியாவை மீட்க ஸ்டாலின் அழைக்கிறார் என்றெல்லாம் பிரசாரம் செய்த ஸ்டாலின் ஏன் வடமாநிலத்தில் பிரசாரம் செய்யவில்லை என கேள்வி எழுந்தது. இதற்கு முக்கிய காரணமாக கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதனம் எதிர்ப்பு என்பது தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதாவது, உதயநிதி போற போக்கில் பேசிய வார்த்தை நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது வழக்குகளும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

சூழ்நிலை இப்படி இருக்க, இண்டியா கூட்டணிக்கு பிரசாரம் செய்ய ஸ்டாலின் திட்டத்தை திமுக மூத்த எம்பி ஒருவர் தயாரித்து அதனை இண்டியா கூட்டணிக்கு அனுப்பியுள்ளனர். வட மாநிலத்தில் ஸ்டாலின் அவர்கள் பிரசாரம் செய்தால் பாஜகவினர் சனாதனத்தை கையில் எடுப்பார்கள் என கூறியுள்ளார்களாம். கேரளாவும் செல்லவில்லை. கர்நாடகாவில் தமிழர்கள் கணிசமாக வாழ்கின்றனர் அங்கு காவேரி நீர் பிரச்சனையை கருத்தில் கொண்டு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கபடவில்லை என கூறப்படுகிறது. தெலுங்கானா முதல்வர் ரேவந் ரெட்டியும் உதயநிதியின் சனாதன பேச்சுக்கு பொறுப்பேற்கவேண்டும் என்றார். இதனால் ஸ்டாலின் எங்கும் பிரசாரம் செய்யாமல் குடும்பத்துடடன் ஓய்வெடுக்க கொடைக்கானல் பிளான் போட்டு வைத்துள்ளார் என கூறப்படுகிறது.

மேலும், அரசியல் விமர்சகர்கள் கூறுவது, ஸ்டாலின் பிரசாரம் செய்யாத வரை காங்கிரஸுக்கு நல்லது. அவர் சென்றால் காங்கிரஸுக்கு கிடைக்கும் 10, 20 இடங்களும்  மொத்தமாக ஊற்றி கொள்ளும் என கூறுகின்றனர். ஒருபக்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ் தவிர மற்ற மொழிகளும் தெரியாது என கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.