24 special

அதிமுகவுக்கு போட்டியாக மாறும் பாஜக.. ரிப்போர்ட் சொல்லவது என்ன..?

Stalin, Eps, Annamalai
Stalin, Eps, Annamalai

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் எதிர்பார்ப்பு என்பது அதிகரித்த வண்ணம் உள்ளன. தேர்தல் முடிவுக்கு வந்த பிறகும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசியலில் இரண்டாவது பெரிய கட்சியாக யார் இருக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளன.


நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதற்கட்டமாக தமிழகத்தில் நடைபெற்றது. இங்கு நான்கு முனை போட்டி என்பது பரபரப்பாக சென்றது. இந்த நிலையில் தமிழகத்தில் இந்த மக்களவை தேர்தொளோடு புதிய மாற்றம் ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து கடந்த 2019 மக்களவை தேர்தலை சந்தித்தது. அப்போது அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி என்பது உறுதி சசெய்யப்பட்து. மீதம் உள்ள 39 இடத்திலும் திமுக கூட்டணி அங்கம் வகித்தது.

இந்த சூழ்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் நான்கு முனை போட்டியில் யாருக்கு சாதகமாக இருக்கும் என்று அந்த அந்த கட்சிகளும் ஒரு சர்வே ஒன்றை எடுத்துள்ளதாம். அதில் பாஜகவின் வாக்கு சதவீதம் என்பது அதிகரிக்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஐந்து முதல் ஏழு தொகுதி வரை பாஜக கூட்டணி காட்சிகள் இடம் பிடிக்கும் என கூறப்படுகிறது. இது அதிமுக தலையில் இடியாய் விழுந்துள்ளது. இதேபோல் அதிமுக நடத்திய சர்வேயில் கொங்கு பகுதியில் அதிமுக கட்சி இரண்டாம் இடத்திற்கு போகலாம் என்றும் கள்ளக்குறிச்சி, ஈரோடு மட்டுமே அதிமுகவுக்கு சாதகமாக இருப்பதாகவும் அதுவும் உறுதியாக சொல்ல முடியாத தொகுதியாக உள்ளதாகவும் தென் மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் ஒரு தொகுதியும் அதிமுகவுக்கு சாதகமாக இல்லை என்ற தகவல் கிடைத்துள்ளதாம்.

தென் மாவட்டம் மற்றும் கொங்கு பகுதிகளில் அதிமுக வெற்றி என்பது கடினமாக இருப்பதாகவும், தேனி, ராமநாதபுரம், பொள்ளாச்சி, தர்மபுரி உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு செல்லலாம் என கூறப்படுகிறது. திமுக கூட்டணி பென் என்ற திமுகவிற்கு நெருக்கமான அமைப்பு நடத்திய சர்வே + உளவுத்துறை சர்வே + மாவட்ட நிர்வாகிகள் எடுத்த சர்வேயில், திமுக கூட்டணி 30 தொகுதி வரை கைப்பற்றலாம் வெற்றி திமுகவுக்கு சாதகமாக இருப்பதாக ரிப்போர்ட் சென்றுள்ளதாம். திருச்சி, பொள்ளாச்சி, கோவை மற்றும் தொகுதிகளில் திமுகவுக்கு இழுபறி நடக்கலாம் என ரிப்போர்ட் அதிரடியாக பறந்துள்ளது.

அதிமுக இந்த தேர்தலை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள் சரியாக பணிகளை செய்யவில்லை என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அப்செட்டில் இருப்பதாக சில தகவல்கள் ஊடகத்தில் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது வெளியாகும் ஒவ்வொரு தகவலும் அதிமுகவுக்கு எதிராக இருப்பதால் ஜூன் மாதத்திற்கு பிறகு அரசியலில் ஒரு புயல் கிளம்பும் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. மேலும், இந்த ரிப்போர்ட் எல்லாம் தேர்தல் முடிவை பொறுத்து மாறலாம் அப்போது தான் தெரியவரும் இரண்டாவது பெரிய கட்சி யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.