Politics

கொங்கு நாடு எதிரொலி 11 அமைச்சர்களும் கோவை வருகிறார்கள் பாஜக தேசிய தலைவர் நட்டா அறிவிப்பு ..

Kongunadu
Kongunadu

   கோவையை தலைநகராக கொண்டு கொங்கு நாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என பாஜகவினர் குரல் கொடுத்த நிலையில்.. அது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது.ஒன்றிய அரசு என்று மத்திய அரசை திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் நிர்வாகிகள் அழைப்பதற்கு பதிலடியாக கொங்கு நாடு என்ற கோஷத்தை பாஜகவினர் எழுப்பினரா இல்லை உண்மையில் அந்த திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா என்ற கேள்வி எழுந்தது, இந்த சூழலில் உண்மையில் மத்திய அரசு கொங்கு நாடு என்ற தனி மாநிலத்தை உருவாக்க விரும்புவதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் செய்ய தொடங்கிவிட்டது உறுதியாகியுள்ளது.


கொங்கு நாடு என்ற தனி மாநிலம் உருவாகிறது என்ற செய்தியை வெளியிட்ட பிரபல தனியார் நாளிதழுக்கு பாஜக கட்சியின் தேசிய தலைவர் நட்டா சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார், அதில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 11 பெண் அமைச்சர்களும் விரைவில் கோவையில் கூட இருப்பதாக அவர் தெரிவித்தது  பிண்ணனியில் கொங்கு நாடு திட்டம் உள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அமைச்சர்கள் கூடினால் வருகை தந்தால் அது தமிழக களத்தில் அதிகம் எதிரொலிக்கும் ஆனால் அதனை தாண்டி கோவைக்கு பெண் மத்திய அமைச்சர்கள் செல்வது என்பது   கொங்கு நாடு கோரிக்கையை வலுப்படுத்த உள்ள திட்டம் என்றே கூறப்படுகிறது ,கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம் எல் ஏ வானதி ஸ்ரீனிவாசன் கொங்கு மண்டல கோரிக்கை அப்படியே உள்ளது எனவும் வரும் காலத்தில் இந்த பகுதியில் சந்திக்கும் பிரச்சனைகள் அடிப்படையில் கொங்கு நாடு கோரிக்கையை வைப்பதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த இருப்பதாக தெரிவித்தார்.

அத்துடன் தனக்கு என்று எந்த தனி கருத்தும் இல்லை என்றும்கட்சியின் கருத்தைதான் தான் தெரிப்பதாகவும் தெரிவித்தார் ,   இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் நட்டா தனியார் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியும் , கொங்கு மண்டலத்தில் 11 பெண் அமைச்சர்கள் கூட உள்ளதாக தெரிவித்துள்ள கருத்து பாஜக கொங்கு நாடு கருத்தில் தீவிரமாக உள்ளது என்பதுடன் செயலை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.மேலும் நட்டா செப்படம்பர் மாதம்தமிழகம் புதுவையில் மூன்று நாள் அரசியல் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், திமுக அரசால் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக பாஜக போராடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.