Tamilnadu

தீவிரவாத அமைப்பிடமிருந்து பணம் பெற்ற அரவிந்த் கெஜ்ரவால்...,!! வேற லெவலில் இறங்கும் என் ஐ ஏ...

Arvind Kejrawal
Arvind Kejrawal

நாடு முழுவதும் தற்போது லோக் சபா தேர்தல் நடைபெற்று வருகிறது அதோடு தேர்தல் பிரச்சாரங்களும் ஆங்காங்கே விறுவிறுப்பாக நடந்து வருகின்ற நிலையில் டெல்லியில் மட்டும் தற்போது மதுபான கொள்ளை வழக்கு விசாரணை தேர்தலை விட பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏனென்றால் அங்கு ஆட்சியில் இருந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரவால் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக 2022 ஆம் ஆண்டு மணி சிசோடியா மற்றும் 14 பேர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்திருந்தது அப்பொழுது கலால்த்துறை ஆணையர் மற்றும் மற்ற சில அதிகாரிகள் மட்டுமே இந்த விவகாரத்தில் அடங்கியிருந்தனர். ஆனால் புதிய மதுபான கொள்கை அமலுக்கு வந்த பிறகு சிபிஐ அரசின் கருவூலத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக பெரும் குற்றசாட்டை முன் வைத்தது. அதோடு உரிமம் பெற்ற மதுபான விற்பனையாளர்களுக்கு நியாயமற்ற சலுகைகளை வழங்கும் நோக்கத்தில் சில தனிச்சியான மாற்றங்கள் புதிய மதுபான கொள்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் செய்தனர் என்றும் சிபிஐ தனது குற்றச்சாட்டில் முன் வைத்தது.


மேலும் கலால் துறையின் பொறுப்பாளராக இருந்த சிசோடியா புதிய மதுபான கொள்கையில் மூலம் துணை ஆளுநரின் ஒப்புதல் பெறாமலேயே மோசடியாக வருவாய் இயற்றியதாகவும் டெல்லி துணை நிலைய ஆளுநர், டெல்லி முதல்வர் மற்றும் மணி சிசோடியா ஆகியோருக்கு டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் அறிக்கை அனுப்பியிருந்தார். மேலும் கொரன காலத்தில் மதுபான விற்பனையாளர்களுக்கு அரசு தரப்பில் வழங்கப்பட்ட தள்ளுபடி, அளவுக்கு அதிகமான பலனை உரிமைதாரர்களுக்கு ஏற்படுத்தி உள்ளதாகவும் சுமார் 144.36 கோடி ரூபாய் இதனால் கருவூலத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. அதோடு அமைச்சரவைக்கும் துணைநிலை ஆளுநர் தெரியப்படுத்தாமலேயே புதிய மதுபான கொள்கையில் சில நடைமுறைகளை கொண்டு வந்ததாகவும் கூறப்பட்டது.

இப்படியே இந்த வழக்கு இரண்டு வருடங்களாக இழுபறியில் இருந்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் டெல்லியின் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரவாலை இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறி அவரது இல்லத்தில் அமலாக்க துறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரவாலிடம் விசாரணை மேற்கொண்டனர்.அதற்குப் பிறகு அவரை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து சென்றனர். இவரது கைதிற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்த வண்ணமே இருந்தது. அதோடு இதற்கான விசாரணைகளும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்து வருகிற நிலையில் டெல்லி துணைநிலை ஆளுநர் மற்றும் ஒரு பரபரப்பான விவகாரத்தை முன்வைத்து அதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் என் ஐ ஏ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதாவது அமெரிக்காவின் நியூயார்க்கை தனது தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சீக்கியருக்கான நீதி அமைப்பை கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது.

மேலும் இந்த அமைப்பை தீவிரவாத பட்டியலிலும் சேர்த்தது. அதுமட்டுமின்றி கடந்த மார்ச் மாதம் சீக்கியருக்கான நீதி அமைப்பின் தலைவரான குர்பத் வந்த் சிங், 2014 முதல் 2022 வரை இடைப்பட்ட காலத்தில் ரூபாய் 134 கோடியானது எங்கள் தரப்பில் இருந்து கெஜ்ரவாலுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். அதனால் இது தொடர்பாக கேஜ்ரவாளிடம் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த டெல்லி துணைநிலை ஆளுநரிடம் பரிந்துரை செய்துள்ளது அது குறித்து மத்திய உள்துறை அமைச்சக செயலாளருக்கு துணைநிலை ஆளுநரும் கடிதம் எழுதியுள்ளார். மேலும் தற்பொழுது கேஜ்ரவாலின் மேல்முறையீடு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிற நிலையில் தீவிரவாத பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒரு அமைப்பிடமிருந்து கேஜ்ரிவால் 134 கோடி பெற்ற விவகாரத்தில் என் ஐ ஏ விசாரணை மேற்கொள்ள இருப்பது வேறு கெஜ்ரவால் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.மேலும் கெஜ்ஜரிவால் மீதான இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனைகள் கடுமையாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது....