24 special

திமுகவின் சாம்ராஜ்யத்தைச் சரிக்கும் ஆம்ஸ்ட்ராங் அஸ்திரம்! சென்னை கோட்டையை அதிரவைக்கும் பொற்கொடி! யாரும் எதிர்பார்க்காத மூவ்

MKSTALIN,ARMSTRONG
MKSTALIN,ARMSTRONG

வரும் சட்டமன்ற  தேர்தலில் திமுகவின் கோட்டையாக இருக்கும்  சென்னையை வீழ்த்த  தேசிய ஜனநாயக கூட்டணியின் அஸ்திரம்  திமுகவை பீதியடைய செய்துள்ளது.  தேர்தல் களத்தில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் வாக்கு சேகரிப்பு மட்டுமல்ல, அதிகாரம் மற்றும் அத்துமீறல்களுக்கு எதிராக ஒரு பெண் நடத்தும் தர்ம யுத்தமாகவே பார்க்கப்படுகிறது. 2024 ஜூலை 5ஆம் தேதி நிகழ்ந்த அந்தப் படுகொலைச் சம்பவம் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியது. அன்று கையில் கைக்குழந்தையுடன் தன் கணவரின் உடலை அடக்கம் செய்யக் கூட இடமின்றித் தவித்த சுவடுகள் இன்றும் மறையவில்லை, 


இந்த நிலையில் திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் திரு.வி.க நகர் தொகுதியில் தற்போது நிலவும் சூழல் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இல்லை. ஆம்ஸ்ட்ராங்கின் மறைவால் ஏற்பட்டுள்ள கடும் கொந்தளிப்பு 40 சதவீதத்திற்கும் அதிகமான பட்டியலின வாக்காளர்களைப் பொற்கொடியின் பக்கம் ஈர்த்துள்ளது. அவர் ஒரு கட்சியின் தலைவராக மட்டுமின்றி, சென்னை போன்ற பெருநகரங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் கல்வி மற்றும் சமூக நலத் திட்டங்களுக்காகவும் குரல் கொடுத்த ஒரு மக்கள் தலைவராகத் திகழ்ந்தார். சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு வன்னியர் மற்றும் சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்த அவரது தாக்கம், தற்போது பொற்கொடிக்கு ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக மாறியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நகர்வு இந்தத் தேர்தலில் ஒரு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கி, அதிமுகவின் அடையாளமான 'இரட்டை இலை' சின்னத்திலேயே போட்டியிட வாய்ப்பளித்திருப்பது எளிய மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோர் மத்தியில் அவருக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. இதனுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் முழுமையான ஆதரவும் சேர்வதால், வன்னியர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூக வாக்குகள் ஒருங்கிணைந்து பொற்கொடிக்கு வலுசேர்க்கின்றன.

பெரம்பூர் மற்றும் புளியந்தோப்பு போன்ற பகுதிகளில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கும், அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியும் இணைந்த இந்த மும்முனைத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திமுக மேலிடம் திணறி வருகிறது. திமுக கூட்டணியில் விசிக போன்ற கட்சிகள் இருந்தாலும், 'ஆம்ஸ்ட்ராங்' என்கிற பெயருக்குப் பின்னால் உள்ள உணர்ச்சிப் பிழம்பு தலித் வாக்குகளைச் சிதறடித்துப் பொற்கொடிக்குச் சாதகமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன் கணவரின் மரணத்திற்கு விடைதேடிப் போராடும் ஒரு மனைவியின் கேள்விகளுக்கு மக்கள் அளிக்கும் தீர்ப்பு, 2026 தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.