Tamilnadu

60 நாள் கெடு விதித்த அண்ணாமலை 43% மட்டுமே நிரம்பிய நிலையில் அதிரடி!

annamalai latest tamil
annamalai latest tamil

நகராட்சி தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் சில இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தமாலும்  உள்ளடி வேளையிலும் ஈடுபட்ட நிர்வாகிகள் மீது கட்சி தலைமைக்கு புகார் சென்றுள்ள நிலையில் அவர்களை கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார் அண்ணாமலை.


நகர்புற தேர்தல் தேர்தலில் பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது மொத்தமாக 5.44% வாக்குகளை பெற்றுள்ளது இருப்பினும் அக்கட்சியின் வாக்கு சதவிகிதம் குறைந்தது 9 முதல் 10% இருக்கும் என கணக்கிட்டப்பட்டுள்ளது. குறிப்பாக 43% இடங்களில் மட்டுமே நகர்புற தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது 100% இடங்களில் போட்டியிட்டால் குறைந்தது 10% வாக்குகளை பெற்று இருக்கலாம் என அக்கட்சி தலைமை கணக்கிட்டுள்ளது.

இந்த சூழலில் 'அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தாத மாவட்ட தலைவர்கள், தாங்களாகவே விலகி விடுங்கள்; இல்லாவிட்டால் நானே நீக்குவேன்' என, தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து  மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உடன், நேற்று அண்ணாமலை கமலாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.அப்போது, சில மாவட்ட தலைவர்கள் பேசுகையில், 'தி.மு.க., வின் வெற்றிக்கு அதிகார பலம், பண பலம் காரணம்' என்றனர்.

உண்மைதான் இருப்பினும் 'வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல், சென்னை மாநகராட்சியின் 134வது வார்டில் நம் வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார். அதற்கு, அவரின் கடுமையான உழைப்பும் நிர்வாகிகளின் ஒத்துழைப்பும் தான் காரணம் இரவு பகல் பார்க்காமல் உழைத்தனர் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலை இருந்ததா என தெரியவில்லை இனி அது குறித்து தெரிந்து கொள்வோம

மேலும் பேசிய அண்ணாமலை கட்சியினர் அனைவரும் மக்களுடன் தினமும் நேரடியாக பழகி, கட்சியை வளர்க்க கடுமையான உழைப்பை தர வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலான மக்களின் மனநிலையாக இருக்கும். இந்த மனநிலை லோக்சபா தேர்தலின்போது, பிரதமர் வேட்பாளரை வைத்து மாறும்.

பா.ஜ க விற்கு அனைத்து தரப்பினரும் ஓட்டளிக்க தயாராக உள்ளனர். அதற்கு ஏற்ப கட்சியை பலப்படுத்த நிர்வாகிகளும் தயாராக வேண்டும். வேட்பாளர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நகராட்சிகள், பேரூராட்சிகளின் அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடியாத மாவட்ட தலைவர்கள், தங்கள் பதவியில் இருந்து தாங்களே விலகி கொள்வது நல்லது.

குறிப்பாக, ஒரு மாவட்டத்தில், 30 சதவீதத்திற்கும் கீழ் வேட்பாளர்களை நிறுத்திய மாவட்ட தலைவர்கள் பதவிகளை விட்டு விலகி விடுங்கள்; இல்லாவிட்டால் நானே நீக்கி விடுவேன். கட்சி பணியில் சரிவர செயல்படாத பகுதி நிர்வாகிகளை மாவட்ட தலைவர்களே மாற்றி கொள்ளலாம்; உள்ளூர் பிரச்னைகள் தொடர்பாக, தாங்களே போராட்டங்களை அறிவிக்கலாம் என, அண்ணாமலை பேசினார். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

பல இடங்களில் வேட்பாளர்களை தேர்வு செய்ய நாட்கள் குறைவாக இருந்ததாக சிலர் கூறிய நிலையில் மாவட்டத்தில் யார் சிறந்த வேட்பாளர்கள் என்பது கூட ஒரு மாவட்ட தலைவர் தெரிந்து வைத்து கொள்ளவில்லை என்றால் பின்பு எப்படி கட்சியை வலுப்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 60 நாட்களில் கிராமம் வரை கட்சியை கொண்டு செல்லாத நிர்வாகிகள் மீது நிச்சயம் நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது.