24 special

விகடனுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை ! என்ன தான் அட்டை படத்தில் இருக்கிறது?

Annamalai
Annamalai

தமிழக பாஜக தலைவர் குறித்து செய்தியை பகிர இருக்கும் பிரபல தனியார் நாளிதழுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார், இன்று காலை அண்ணாமலை அவரது முகநூல் பக்கத்தில், "தொண்டர்களுக்கு அண்ணாமலை மீது வெறுப்பு இருக்கிறது... எந்த தொண்டர்களுக்கு? திமுக தொண்டர்களுக்கா? 


அன்பார்ந்த ஜூனியர் விகடன் நண்பர்களுக்கு, இந்த வாரம் வரவிருக்கும் அட்டை படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை, அதாவது அண்ணாமலையை விமர்சனம் செய்து விகடன் வார இதழில் கட்டுரை வெளியிட இருப்பதாகவும் அதில் பாஜக தொண்டர்கள் அண்ணாமலை மீது வருத்தத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இது அண்ணாமலை கவனத்திற்கு சென்ற நிலையில் எந்த தொண்டர்கள் திமுக தொண்டர்களா என கிண்டல் அடித்துள்ளார் அண்ணாமலை.

உண்மையில் அண்ணாமலை செயல்பாடுகள் மூலம் பெரிய அளவில் அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்து வருவதாகவே பார்க்க படுகிறது, இன்று காலை நமது TNNEWS24 DIGITAL முகநூல் பக்கத்தில் அண்ணாமலை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கொடுத்த பதிலடி சரியா தவறா என கேள்வி கேட்டு இருந்தோம்..


இதில் 4 மணி நேரத்தில் 1500 பேர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து இருந்தனர், இதில் 1400 மேற்பட்ட பாஜக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் அண்ணாமலை பதிலடி சரியானது என குறிப்பிட்டுள்ளனர். 

LINK- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02WzHd2eu14jAvDHrJkuhmPfSfYrHjHXVjUAAFTVMJy1E3Uq652Zk7hRoznFZn21J5l&id=100075645799349

இந்த நிலையில் பாஜக தொண்டர்கள் அண்ணாமலை மீது வருத்தத்தில் இருப்பதாக செய்தி வெளியானால் கிண்டலுக்கு உள்ளாகுமே தவிர வரவேற்பை பெறாது என்று அறியமுடிகிறது, அண்ணாமலை அரசியலுக்கு வந்த புதிதில் அண்ணாமலை கூறாத செய்தியை செய்தியாக விகடன் பகிர்ந்த நிலையில் அண்ணாமலை நேரடியாக விகடன் நிறுவனத்தை அழைத்து விளக்கம் கேட்டார் அப்போது அந்த பதிவை விகடன் நிறுவனம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

ஜூனியர் விகடனில் வெளியாக இருக்கும் அட்டை படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது,அண்ணாமலை வாழ்த்து தெரிவித்து இருக்கிறாரே என பலரும் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.