
திமுக ஆட்சிக்கு வந்ததும், அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆற்றில் மணல் அள்ளலாம், அதனைத் தடுப்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்று, தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி பேசியது, அனைவருக்கும் நினைவிருக்கும்.செந்தில் பாலாஜியின் தொகுதியான கரூரில் விதிகளை மீறி நடக்கும் மணல் கொள்ளைகளைத் தடுக்கவேண்டிய அதிகாரிகள், மணல் மாஃபியாக்களுக்குத் துணை போகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அதிலும், தனது இடத்தில் மணல் அள்ளியதைத் தட்டிக்கேட்ட நபரையே வெட்டிக் கொன்ற சம்பவத்தில், ‘இது நிலத் தகராறு பிரச்னை...’ என்று போலீஸார் பூசி மெழுகுவது, கரூரில் பெரும் சர்ச்சையாகியிருக்கிறது!
இது குறித்து பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாங்கல் வெங்கடேஷ் என்ற நபர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்று தெரியவருகிறது.கனிம வளக் கொள்ளையைத் தடுக்க முயற்சித்த அரசு அதிகாரிகளை, அவர்கள் அலுவலகத்திலேயே வைத்து வெட்டிக் கொலை செய்ததும் இதே திமுக ஆட்சியில்தான். தற்போது, இன்னொரு கொலை. மணல் கொள்ளையைத் தடுத்தால் கொலை செய்வோம் என்று பொதுமக்களுக்கு விடப்பட்ட நேரடி மிரட்டல்
மேலும் கரூரில், மணல் கொள்ளையைத் தடுக்க முயற்சித்த திரு. மணிவாசகம் என்பவர், வாங்கல் வெங்கடேஷ் என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு பெண்கள் உட்பட, நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாங்கல் வெங்கடேஷ் என்ற நபர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்று தெரியவருகிறது. என்று கூறிய நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சிறப்பு குழு இறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதற்கிடையில் மணல் கொள்ளைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும், ‘காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தை சேந்தவர்கள் கூறுகையில் சண்முகம், “இது, மணல் கொள்ளையால் ஏற்பட்ட கொலை. ஆனால், காவல்துறையோ நிலத் தகராறு என்று மடைமாற்றுகிறதுமணல் கொள்ளை நடப்பதை போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன் கூட மனு கொடுத்தோம். அதற்கும் நடவடிக்கை இல்லை. மணல் கொள்ளைக்கு எதிராகத் தொடர் புகார் கொடுத்துவரும் எங்களுக்கு, மணல் மாஃபியாவிடமிருந்து தொடர் கொலை மிரட்டல் தான் வருகிறது என்கிறார்கள்.
இதற்கிடையே தொடர் புகார்கள் எழுந்ததும் மஃப்டியில் வந்த டி.ஐ.ஜி தனிப்படை போலீஸார், காவிரி ஆற்றில் போலியாக அரசு குவாரிபோல் நடத்திவந்த மணல் குவியலைப் பார்த்து அதிர்ந்துபோனார்கள். இதையடுத்து 26 லாரிகள், போலி அரசு முத்திரைகள், 3 கார்கள், 4 சீல் கட்டைகள், ஒரு ட்ரிப் சீட் புத்தகம், ஒரு லேப்டாப், ரூ.2.5 லட்சம் பணம் ஆகியவற்றைக் கைப்பற்றினர். தி.மு.க மாவட்டப் பொதுக்குழு உறுப்பினரான காளியப்பன் என்பவரின் இடத்தில் பிரமாண்ட மணல் சலிப்பகம் இயங்கி வந்ததையும் கண்டறிந்தனர். லாரி டிரைவர்கள், ஊழியர்கள் என 10 பேரைக் கைதுசெய்தனர்.
ஆனால், இதற்கெல்லாம் சூத்ரதாரியான காளியப்பனை இன்றுவரை கைதுசெய்யவில்லை. இந்த நடவடிக்கைக்குப் பிறகு, ஒரு வாரம் மட்டும் மணல் கொள்ளை நடக்காமல் இருந்தது. ஆனால், அதன் பிறகு பழையபடி தங்கு தடையின்றி மணல் கொள்ளை நடந்தது. இந்த நிலையில்தான், தி.மு.க-வைச் சேர்ந்த வெங்கடேசன், மணல் அள்ளும் பிரச்னையில் மணிவாசகத்தை வெட்டிக் கொலைசெய்திருக்கிறார்.. மணல் கொள்ளையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் அந்த 12 பேரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும். மணல் அள்ளுபவர்களுக்குத் துணைபோகும் கரூர் மாவட்ட ஆளுங்கட்சி தி.மு.க புள்ளிகள்மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற குரல்கள் எழுந்துள்ளது.