24 special

சீண்டி பார்த்த அமெரிக்கா இந்திய அடித்த அடி... உலக அரசியலில் பெரும் புயலை கிளப்பிய மோடி! Modi vs Trump

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

இந்தியா -அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாத நிலையில், 'இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்காவில், 50 சதவீத வரி விதிக்கப்படும்' என அறிவித்துள்ளார், அமெரிக்க அதிபர் டிரம்ப். மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கும் நம் நாட்டிற்கு அபராதம் விதித்துள்ளார்.


'வெள்ளை மாளிகை கோமாளி' என்று, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி அடித்துள்ள கிண்டலை, டிரம்பின் செயல்கள் உறுதிப்படுத்துகின்றன.அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, அவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நகைப்பிற்குரியதாகவே உள்ளன.

ஆயுத வியாபாரத்தை மட்டுமே நம்பி இருக்கும் அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஆயுத கொள்முதல் செய்வதையும்  இந்தியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதையும் அமெரிக்காவால் தாங்க முடியவில்லை. 

இது ஒருபுறம் இருந்தால் இந்திய விவசாயிகள் நலனே தனக்கு முக்கியம் என்று கூறியுள்ள  பிரதமர் மோடி, அதற்காக என்ன விலை கொடுக்க வேண்டியிருந்தாலும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.  விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலனில் நாடு  ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை என்றும் உறுதிப் படக் கூறியுள்ளார்.அதனால்தான் இந்த வரி விதிப்பு! 

இந்தியா ஆயுத ஏற்றுமதி நாடானதும் இன்னும் சொந்த தயாரிப்பில் பெரும் பலம் பெறுவதும் அமெரிக்காவுக்கு  பொறுக்கவில்லை

இன்னும் பாகிஸ்தானை தன்னை கேட்காமல் அடித்து போட்டது பின்னர் தான் போரை நிறுத்தியதாக சொல்வதை ஒப்புகொள்ளாதது என காரணம் நிறைய உண்டு. அது மட்டுமில்லாமல் . பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான எப் 16 போர் விமானம் இது அமெரிக்காவின் தலைசிறந்த விமானம் ஆகும்.   எப் 16 உள்ளிட்ட3 போர் விமானங்களை இந்திய வான் பாதுகாப்பு கவச அமைப்பு சுட்டு வீழ்த்தியது. இது அமெரிக்காவுக்கு மிக பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. உலக நாடுகள் ஆயுதம் வாங்க இந்தியா பக்கம் திரும்பியது. 

இந்தியாவுக்கு எஃப் 35 ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். பின்னர் அமெரிக்க எப் 35 வேண்டாம் என இந்தியா மறுத்து விட்டது இது அமெரிக்காவுக்கு பெருத்த அவமானம் ஆகிவிட்டது.  இந்தியாவின் வான்வெளி பலம், ஏவுகணை பலம், பெரும் கப்பல்கள் இன்னும் ஆளில்லா விமான பலமெல்லாம் அமெரிக்காவுக்கு எரிச்சலை தந்தது.  

அதுமட்டுமில்லாமல் மோடி பதவி ஏற்றவுடன் கடந்த 2014, செப்டம்பா் 25-ஆம் தேதி ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் தொடங்கப்பட்டது. அது மிகப்பெரும் வெற்றி அடைந்துள்ளது.  தற்போது இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது மேலும், 2023-24-ஆம் ஆண்டில் நாட்டின் பாதுகாப்புத் துறை உற்பத்தி மதிப்பு இதுவரை இல்லாத அளவில் ரூ.1.27 லட்சம் கோடியை எட்டியது இது எல்லாம் அமெரிக்காவுக்கு மேலும் எரிச்சலை உண்டாக்கி உள்ளது. 

மேலும் ஆயுத ஏற்றுமதியில் இந்தியா வளர்வதை தடுக்க முடியாமல் தவித்து வருகிறது அமெரிக்கா இந்தியாவுக்குள் குழப்பம் செய்யமுடியவில்லை, ஆட்சியினை அசைக்க முடியவில்லை, இந்தியாவோடு மோத அக்கம் பக்கம் நாடும் தயாராக இல்லை. இதனால் இப்படி வரிகளை அதிகரித்து வர்த்தகபோரில் இறங்கியிருக்கின்றார் ட்ரம்ப் இது அமெரிக்காவிலும் பெரும் பாதிப்பை கொடுக்கும், இந்தியா இதனை வேறுவழியில் சமாளிக்கும் ஆனால் அமெரிக்க நிலை நிச்சயம் சிக்கலாகும்