24 special

அமெரிக்காவே ஒப்புக்கொண்ட உண்மை! இந்தியா இல்லாமல் உலக அரசியல் இல்லை! இதுதாண்டா மோடி பவர்

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

ஒரு காலத்தில் இந்தியா என்றால் வளர்ந்து வரும் நாடு, வெளிநாட்டு உதவிகளை நம்பிய பொருளாதாரம், உலக சக்திகளின் அறிவுறுத்தல்களை கேட்டு நடக்கும் நாடு என்ற பார்வையே நிலவியது. ஆனால் இன்று அந்த படம் முற்றிலும் மாறியுள்ளது. இந்தியாவை உலகமே தேடும் நிலைக்கு கொண்டு வந்த தலைமையே பிரதமர் நரேந்திர மோடி என்பதற்கு, சமீப கால நிகழ்வுகள் அனைத்தும் சாட்சியாக நிற்கின்றன.


இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் தற்காலிக பதற்றத்தை ஏற்படுத்தியது. இது முந்தைய காலத்தில் நடந்திருந்தால், இந்தியா அமைதியாக தலை குனிந்து, வெளிநாட்டு அழுத்தங்களுக்கு உடன்பட்டிருக்கும். ஆனால் இது மோடி தலைமையிலான புதிய இந்தியா. இங்கு முடிவுகள் வெளிநாட்டு அழுத்தங்களால் அல்ல, தேசிய நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படுகின்றன.

இந்த சூழ்நிலையில், இந்தியாவுக்கான புதிய அமெரிக்க துாதராக பொறுப்பேற்ற செர்ஜியோ கோர் டெல்லியில் வெளியிட்ட கருத்துகள், உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளன. “இந்தியாவை தவிர, அமெரிக்காவுக்கு வேறு எந்த நாடும் இவ்வளவு முக்கியமல்ல” என்ற அவரது வெளிப்படை அறிவிப்பு, இந்தியாவின் உலக முக்கியத்துவத்தை அமெரிக்காவே ஒப்புக்கொண்ட தருணமாக பார்க்கப்படுகிறது. இது வெறும் மரியாதைக்கான வார்த்தை அல்ல. உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சி, சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவாகி வரும் நிலை, ஆசிய அரசியலில் இந்தியாவின் மையப் பங்கு, பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி போன்ற துறைகளில் இந்தியாவின் அவசியம் ஆகிய அனைத்தையும் அமெரிக்கா உணர்ந்ததன் வெளிப்பாடே இது.

மேலும், மோடி – டிரம்ப் உறவு குறித்து பல்வேறு ஊகங்கள் பரப்பப்பட்ட நிலையில், “மோடி – டிரம்ப் நட்பு உண்மையானது” என அமெரிக்க துாதர் நேரடியாக கூறியது, விமர்சகர்களுக்கான தெளிவான பதிலாக அமைந்துள்ளது. உண்மையான நண்பர்களுக்குள் சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றுவது இயல்பே. ஆனால் அது உறவை உடைக்கும் அளவிற்கு நீடிக்காது. இதே கருத்தை வலியுறுத்திய செர்ஜியோ கோர், டிரம்புடன் பல நாடுகளுக்கு பயணம் செய்த அனுபவம் தனக்கு இருப்பதாகவும், சமீபத்தில் நடந்த ஒரு இரவு விருந்தின் போது கூட டிரம்ப் இந்தியா பயணத்தை நினைவுகூர்ந்து பிரதமர் மோடியை மிக உயர்வாகப் பாராட்டியதாகவும் தெரிவித்தார். அடுத்த ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டோ டிரம்ப் நிச்சயம் இந்தியாவுக்கு வருவார் என்ற அவரது நம்பிக்கை, இந்தியாவின் உலக மதிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

ஒரு காலத்தில் அமெரிக்கா சொன்னால் கேட்க வேண்டும், உலக வங்கி சொன்னால் ஒப்புக்கொள்ள வேண்டும், பெரிய நாடுகள் அழுத்தம் கொடுத்தால் பின்னடைய வேண்டும் என்ற மனநிலை இருந்த இந்தியா, இன்று முற்றிலும் மாறியுள்ளது. இன்று இந்தியா பேசுகிறது, உலகம் கேட்கிறது. இந்தியா முடிவு எடுக்கிறது, உலகம் மதிக்கிறது. இந்தியா நட்பு வைக்கிறது, உலக நாடுகள் வரிசையில் நிற்கின்றன. இந்த மாற்றத்தின் மையத்தில் நிற்பவர் பிரதமர் நரேந்திர மோடி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.