அதிமுக பாஜக கூட்டணி இனி இல்லை அறிவித்தது அதிமுக! கடந்த சில தினங்களாக குறிப்பாக அண்ணாமலை நடை பயணத்தில் அண்ணாதுரையை முத்துராமலிங்க தேவர் பேசிய விவகாரம் குறித்து ஒரு சம்பவத்தை எடுத்து மக்கள் மத்தியில் பேசியது சர்ச்சையானது.
இதனை தொடர்ந்து அண்ணாதுரையை எப்படி பேசலாம் அண்ணா என்பவர் எங்களுக்கு எல்லாமுமானவர், அண்ணாவைப் பேசினால் நாங்கள் எப்படி பொறுத்துக் கொள்வோம்? அண்ணாவை பேசினால் நாக்கை வெட்டும் தொண்டர்கள் எங்கள் தரப்பில் உள்ளனர்! அண்ணாவை பேசக்கூடாது, பெயரிலேயே அண்ணாவை வைத்துக்கொண்டு அண்ணாமலை இப்படி எப்படி பேசலாம்? என்பது போன்ற பல எதிர் விமர்சனங்களை அதிமுகவை சேர்ந்தவர்கள் குறிப்பாக செல்லூர் ராஜு, ஜெயக்குமார், சி.வி சண்முகம் போன்றோர் பொதுவெளிகள் அதுவும் பத்திரிகையாளர் முன்பு வைத்து வந்தனர்.
இது பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது, அது எப்படி அண்ணாமலையை கூட்டணியில் இருந்துகொண்டு பேசலாம், விமர்சனம் செய்ய எங்களுக்கும் தெரியும் ஆனால் நாங்கள் கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம் என பாஜகவினர் பதிலடி கொடுத்தனர்.
இந்த நிலையில் இவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக அண்ணாமலை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் 'எனக்கு நான் உண்மையாக இருக்கிறேன் எனது நேர்மையை யாராவது குறைத்து மதிப்பிட்டாலோ, எனது நேர்மையை யாராவது குறைத்து பேசினாலோ நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்! கூட்டணி என்பதற்காக எல்லாம் என்னால் குனிந்து செல்ல முடியாது. எங்களிடமும் ஆட்கள் இருக்கிறார்கள் நான் சரி என்றால் இன்னமும் மோசமாக பேசுவார்கள்' என பதிலடி கொடுத்தார்.
இதன் பின்னணியை விசாரித்த பொழுது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று வந்ததற்கு பிறகு அதிமுக தரப்பிலிருந்து பாஜக கூட்டணியுடன் செல்வது பற்றி பேச்சு எழுந்ததாகவும், மேலும் டெல்லியில் இருந்து அண்ணாமலைக்கு தனியாக போட்டியிடவும் தயாராக இருக்க வேண்டும் என சில முக்கிய பாயிண்ட்டுகள் கூறப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தது. மேலும் டெல்லி மேலிடம் வரும் தேர்தல் கண்டிப்பாக மோடி 3 வைத்து முறையாக பிரதமராக போகும் தேர்தல் ஆனால் அதற்க்கு சில இடைஞ்சல்களை கூட்டணி கட்சிகள் கொடுத்தால் பொறுத்துக்கொள்ள முடியாது என அண்ணாமலை வசம் கண்டிப்பாக சொல்லிவிட்டார்களாம். அதற்காகத்தான் நான் டெல்லியிடம் பேசிவிட்டேன் என அண்ணாமலை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார் அண்ணாமலை!
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் அதிமுக பாஜக கூட்டணி முறிந்து விட்டது தேர்தல் சமயத்தில் தான் இது குறித்து இனி பேச வேண்டும் தற்பொழுது அதிமுக பாஜக கூட்டணி இல்லை இது என்னுடைய முடிவு கிடையாது கட்சியின் முடிவு என அறிவித்தார்.
இப்படி அறிவித்ததும் சமூக வலைதளத்தில் இது குறித்த பெரும் விமர்சனங்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வந்தது, இந்த நிலையில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி ஜெயக்குமாரை விமர்சித்து உடனடியாக எக்ஸ் வலைத்தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அமர் பிரசாத் ரெட்டி தனது பதிவில், 'கட்சி மேலிடம் சொல்லித்தான் தலைவர் அண்ணாமலை பேசுகிறார் என்றால், ஜெயக்குமாரே, நீங்கள் யார் சொல்லி பேசுகிறீர்கள் என்று சொல்ல மாட்டீங்களா? மெயின் ரோட்டுக்கு வந்துடும்மான்னு சொல்வீங்களே, அந்தம்மா சொன்னாங்களா?' என குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணி இல்லை என தெரிந்ததும் முதல் அடியாக பளிச்சென்று பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கொடுத்த அடி தற்பொழுது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இணையத்தில் இந்த அதிமுக-பாஜக கூட்டணி விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.