24 special

நடிகர் விஜயக்கு திமுகவிடமிருந்து வந்த பணம்...இரு கட்சிகளும் கை கோர்த்த விஷயம் வெளிவந்தது...இனி தான் இருக்கு கச்சேரி!

MKSTALIN,TVKVIJAY
MKSTALIN,TVKVIJAY

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் எட்டு மாதங்களே உள்ளன. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை துவங்கி விட்டது. கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தீவிரமடைந்துள்ளது. தேர்தல் நெருக்கத்தில், கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்த்தால், அக்கட்சிகளின் தொண்டர்கள் இடையே, தேர்தல் பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்படுவதால் கூட்டணிகள்  குறித்து தற்போதே முடிவு எடுக்கப்பட்டு வேலைகளை ஆரம்பித்து விட்டன.


இதற்கிடையே தேசிய ஜனாநாயக கூட்டணியில் சேர, த.வெ.க., தலைவர் விஜய்க்கு அ.தி.மு.க., தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. அதை, விஜய் ஏற்கவில்லை. தி.மு.க.,வின், 'பி டீம்' தான் விஜய் எத்தனை முறை அழைத்தாலும், அவர் கூட்டணிக்கு வர மாட்டார்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளது டெல்லி. பண வரவு செலவு முதல் ஆதவ் அர்ஜுனாவை விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து பிரித்து விஜய் கட்சிக்கு அனுப்பியது முதல் அனைத்து வேலைகளையும் திமுக தான் செய்து வருகிறது, இதற்கு பின்னால் கோபாலபுரத்து மாப்பிள்ளையின் மூளை உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் திமுகவுக்கும் விஜய்க்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் ஆதாரங்களை திரட்டி உள்ளது டெல்லி மேலிடம். 

தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன்னதாக, கூட்டணியில் கட்சிகளை சேர்த்து, தேர்தலுக்குள் அக்கட்சிகளின் தொண்டர்கள் இடையிலான உறவை பலப்படுத்த, அமித் ஷா விரும்பினார்.இதற்காகவே, கடந்த ஏப்ரலில் சென்னை வந்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, இரு கட்சிகளின் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்

இந்த நிலையில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ள விஜய், தன்னை முதல்வர் வேட்பாளராக கருதுகிறார். அ.தி.மு.க., கூட்டணிக்கு விஜய் உறுதியாக வரமாட்டார்.ஏனெனில், அவர் தி.மு.க.,வின், 'பீ டீம்' போல் செயல்படுகிறார். கடந்த 2016 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்த, மக்கள் நல கூட்டணியை அ.தி.மு.க., பயன்படுத்திக் கொண்டது போல, வரும் தேர்தலில், அ.தி.மு.க.,வை வீழ்த்த விஜயை பயன்படுத்த தி.மு.க., விரும்புகிறது. அதுமட்டுமில்லாமல் மக்கள் நீதி மையம் போல் விஜயை களமிறங்கியுள்ளது திமுக.  

திமுகவில் அதிகமாக சீட் கேட்டால் அதன் கூட்டணி கட்சிகளை உடைத்தும் வருகிறது. அதில் முதலில் வீழ்ந்தது விடுதலை சிறுத்தை கட்சிகள் தான். விசிக திமுக கூட்டணியை விட்டு சென்றாலோ அதிக சீட் கேட்டாலோ கட்சி இருக்காது என மறைமுக எச்சரிக்கை விட்டுள்ளது திமுக. அதற்கு எடுத்துக்காட்டு தான் ஆதவ் அர்ஜுனாவை விசிகவிலிருந்து தூக்கியது. இதனால் திருமா அடங்கி அத்துமீறாமல் இருக்கிறார். 

அதே போல் , தி.மு.க., அரசு மீதான அதிருப்தி ஓட்டுகள், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு சென்று விடக்கூடாது; அந்த ஓட்டுகளை விஜய் பிரிக்க வேண்டும் என்பதே தி.மு.க.,வின் எண்ணம். இதையறிந்ததும், விஜயின் நகர்வுகள் அனைத்தையும் பா.ஜ.க உன்னிப்பாக கவனித்து வருகிறது.தி.மு.க.,வுக்கு எதிராக கட்சி நடத்துங்கள். அதேநேரம், அ.தி.மு.க., உட்பட எந்த கட்சியுடனும் கூட்டணி சேரக்கூடாது. இதுவே, எங்கள் விருப்பம்' என, தி.மு.க., தரப்பில் இருந்து, விஜய்க்கு சொல்லப்பட்டிருக்கும் தகவலையும் பா.ஜ.க தரப்பு அறிந்து கொண்டு விட்டது.இவ்விபரங்களை பழனிசாமியிடம் தெரிவித்துள்ளது.  'விஜயை கூட்டணிக்கு அழைப்பதை விட்டுவிட்டு, தேர்தல் வேலைகளை தற்போதே ஆரம்பித்தால் வெற்றியை ருசிக்கலாம் என எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளது பா.ஜ.க தலைமை 

மேலும் விஜய் கட்சிக்கு கைமாறிய ரொக்கங்கள் குறித்தும் விரைவில் விசாரணை நடைபெற உள்ளதாக டெல்லி தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் கட்சி தனித்து நிற்பதுதான்அதிமுக பாஜகவுக்கு நல்லது என ஒரு ரிப்போர்ட்டும் சென்றுள்ளது. அதில் திருமா,சீமான், திமுக ஓட்டுக்களை தான் அதிகமாக பிரிக்க வாய்ப்புள்ளது கிட்டத்தட்ட அவர்களின் 7 முதல் 10 சதவீத ஓட்டுக்களை அவர்களிடமிருந்து  விஜய் பிரிக்க உள்ளார். இதனால் அதிமுக பாஜகவுக்கு தான் சாதகம் என்பதால் திமுகவும் விஜயை அடக்கி வைக்க உள்ளதாம்எனவே, தேர்தல் களத்தில் விஜய்யை விமர்சிக்க, சீமானைப் பயன்படுத்தும் பிளானைப் போட்டிருக்கிறது தி.மு.க. அதற்காக, அவருக்குச் சில உதவிகளைச் செய்துகொடுத்து, அவரைக் கைக்குள் வைத்துக்கொள்ளத்தான்ஸ்டாலின்  சீமான்  சந்திப்புக்கு `ஓகே’ சொல்லியிருக்கிறது மேலிடம்