24 special

வரி ஏய்ப்புத் தலைவன்..சட்டம் கூட தெரியாத தளபதி.. பனையூர் பங்களாவில் தவெகவின் தற்குறி அரசியல்

VIJAY,PUSSYANAND
VIJAY,PUSSYANAND

தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாகப் பனையூரில் உள்ள தனது சொகுசு பங்களாவையே கட்சி அலுவலகமாக மாற்றிக் கொண்டு அரசியல் செய்யும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், இன்று விமர்சனங்களின் கூடாரமாக மாறியுள்ளது. "தமிழக அரசியலில் "நேர்மை" மற்றும் "மாற்றம்" என்ற போர்வையில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தனது பயணத்தின் தொடக்கத்திலேயே முரண்பாடுகள், சட்ட அறியாமை மற்றும் உயிரிழப்புகளின் கூடாரமாக மாறியுள்ளது. ஊழலை ஒழிப்பேன் என்று மேடைகளில் வசனம் பேசும் விஜய், தனது நிஜ வாழ்க்கையில் சொகுசு காருக்கு வரி ஏய்ப்பு செய்ய முயன்று, நீதிமன்றத்தால் "நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருங்கள்" என்று குட்டுப்பட்டவர். சொந்த லாபத்திற்காக அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைத் தவிர்க்க நீதிமன்றம் வரை சென்ற ஒருவரால், எப்படி ஒரு மாநிலத்தின் பொருளாதாரத்தை நேர்மையாக நிர்வகிக்க முடியும்?


சமீபத்தில் புதுச்சேரியில் பேசிய விஜய், "புதுச்சேரியில் ரேஷன் கடைகளே இல்லை" என்று ஒரு அப்பட்டமான பொய்யைக் கூசாமல் கூறினார். ஆனால், புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இயங்கி வருவதும், அங்குக் குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருப்பதும் உலகறிந்த உண்மை. ஒரு மாநிலத்தின் அடிப்படை நிலவரம் கூடத் தெரியாமல், மக்கள் மத்தியில் இப்படி ஒரு பச்சைப்பொய்யைப் பரப்பிய விஜய்யின் செயல், அவர் எந்த அளவுக்குத் தற்குறித்தனமான ஆலோசகர்களை வைத்துள்ளார் என்பதைக் காட்டுகிறது. இவரைப் போன்றவர்கள் நாட்டை ஆள வந்தால், போலித் தகவல்களைக் கொண்டே மக்களை ஏமாற்றி விடுவார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் அறியாமை இதைவிடக் கொடுமையானது. "விஜய் 3 அல்லது 4 தொகுதிகளில் போட்டியிட முடியும்" என்று அவர் உளறியது, இந்தியத் தேர்தல் சட்டத்தின் அடிப்படை அறிவு கூட அவருக்கு இல்லை என்பதைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. இத்தகைய தற்குறித் தலைமையின் கீழ், 2025 செப்டம்பரில் கரூரில் நடந்த கூட்டத்தில் முறையான பாதுகாப்பு இல்லாததால் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள். இந்தத் துயரத்திற்குப் பொறுப்பேற்காமல், இப்போதும் மேடைகளில் "விசில்" அடித்துத் திரியும் ரசிகக் கூட்டம் பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது. இந்த 41 உயிர்களின் மரணத்திற்குத் தற்போது சிபிஐ விசாரணை வளையத்தில் புஸ்ஸி ஆனந்த் சிக்கியிருப்பது தவெகவின் நிர்வாகச் சீர்கேட்டிற்குச் சாட்சி.

நிர்வாகிகளின் அறியாமையோ எல்லை தாண்டிச் செல்கிறது. கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, மேடைகளில் கார்ல் மார்க்ஸ் பற்றியும் கம்யூனிசக் கொள்கைகள் பற்றியும் வாய் கிழியப் பேசுகிறாரே தவிர, தவிர, இந்தியாவின்  வீர அடையாளங்களான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அல்லது வ.உ. சிதம்பரனார் திருப்பூர் குமரன், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், மற்றும் பல தமிழக சுதந்திர போராட்ட வீரர்களையம் இராமானுஜர் போன்ற சமூகசீர்திருத்தவாதிகள் மற்றும் பல தியாகிகளைப் பற்றிப் பேசத் தவறிவிட்டார்.  தமிழக மண்ணின் மைந்தர்களை மறந்துவிட்டு, இறக்குமதி செய்யப்பட்ட சித்தாந்தங்களைப் பேசுவது தவெகவின் போலித்தனமான தமிழ்த் தேசியத்தைக் காட்டுகிறது , வரி ஏய்ப்புப் புகாரில் சிக்கிய, பொய்யையே முதலீடாகக் கொண்ட இந்தத் தலைமை, தமிழகத்தை இருண்ட காலத்திற்கே கொண்டு செல்லும் விஜய்யின் இந்த "விசில்" அரசியல் வெறும் சினிமாத் தனமானது; இது நாட்டிற்குப் பேராபத்தானது!