Cinema

விஜயகாந்த் குறித்து உண்மையை சொன்ன பிரபல நடிகர்!

Vijayakanth, Thiyagu
Vijayakanth, Thiyagu

நடிகர் விஜயகாந்தின் மறைவு ஒட்டு மொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியள்ளது. சினிமாவில் கேப்டன், அரசியலில் கருப்பு எம்ஜி ஆர் என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளால உடல்நல பிரச்சனை காரணாமாக கடந்த டிசம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் பிரிந்தது. இந்நிலையில், சினிமா துறையில் விஜயகாந்துடன் நெருங்கிய நண்பரான நடிகர் தியாகு விஜயகாந்த் குறித்து பல தகவல்களை கண்ணீர் மல்க பேசியுள்ளார்.


சினிமா நட்பை தாண்டி இலங்கை தமிழகர்களுக்கு ஆதரவாக விஜயகாந்த், ராதாரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் முன்னின்று நடத்திய போராட்டத்தில் விஜயகாந்த்-தியாகு உறவு மிகவும் நெருக்கமானது என்றே சொல்லலாம். சமீபத்தில் விஜயகாந்த் மரணமடைந்த நிலையில் அவரை பற்றிய பல தகவல்களை பிரபல யூடூப்பில் பகிர்ந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தியாகு, விஜயகாந்தை குடிகாரன் என சொன்னால் யாராக இருந்தாலும் உதைப்பேன். அவன் கடுமையான உழைப்பாளி. என்னுடை பல வருட நண்பன் என்பதால் ‘அவன் இவன்’ என சொல்கிறேன். அதை மரியாதை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

அவரின் மரணத்தில் நடிகர் சங்கம் நடந்து கொண்டது எனக்கு பிடிக்கவில்லை. நடிகர் சங்கம் கடனில் இருந்தபோது மலேசியா, சிங்கப்பூர் சென்று கலைநிகழ்ச்சி நடத்தி கடனை அடைத்து ஒரு கோடியே 70 லட்சம் இருப்பு வைத்தான். ஆனால், அவர் இறந்தபோது அதே நடிகர் சங்கம் உரிய மரியாதையை செய்யவில்லை. நடிகர் சங்கம் சார்பில் ஒரு மலர் வளையம் கூட வைக்கவில்லை. இதை சங்கத்தின் பொருளாளர் கார்த்தியே ஒப்புக்கொண்டார். அதனால், நடிகர் சங்கம் நடத்திய இரங்கல் கூட்டத்திற்கு அவர்கள் அழைத்தும் நான் கலந்துகொள்ளவில்லை. நான் ஊட்டியில் படப்பிடிப்பில் இருந்தபோது என் அம்மா இறந்துவிட்டார். உடனே நான் கும்பகோணம் சென்றேன். அம்மா இழப்பினால் எனக்கு 4 படம் கைவிட்டது விஜயகாந்த் எனக்கு தொலைபேசியில் அழைத்து நான் வரட்டுமா என கேட்டார். நான் வேண்டாம் ஒரு மாதம் களைத்து வந்து விடுகிறேன் என சொன்னேன்.

அடுத்த நாளே விஜயகாந்த் திருச்சி ஏர்போட்டில் இருந்து எனக்கு போன் செய்து நான் வரேன் என கூறினான். நான் உடனே வேண்டாம் என சொன்னேன் உடனே புதுக்கோட்டை, திருச்சி தஞ்சை போன்ற மாவட்டத்தில் இருந்து 500 காரில் விஜயகாந்த் வீட்டிற்கு வந்தார். என் வீடு மெயின் ரோட்டில் இருந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது. எஸ்.பியே என் வீட்டிற்கு வந்துவிட்டார்.. ‘என் நண்பன் மரணத்திற்கு வந்திருக்கிறேன். கொஞ்சம் நேரம் காத்திருங்கள்’ என விஜயகாந்த் சொன்னதை அவர் கேட்கவில்லை. அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். ‘காரை எடுக்க முடியாது என உங்கள் அம்மா ஜெயலலிதாவிடம் சொல்லுங்கள் என கத்தினான் விஜி. பிரச்சனை வேண்டாம் என சொல்லி அங்கிருந்து அவனை அனுப்பி வைத்தேன்.

நட்புக்காக அவர் என வீட்டுக்கு வந்து சென்றார். 500 காரில் வந்தான் நடிகர் சங்கம் இப்பொது அவருக்கு ஏதும் பண்ணவில்லை  என பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோவுக்கு ரசிகர்களோ நடிகர் சங்கம் உன்மையில் அது நடிக்கும் சங்கம் தான், தமிழகம் தவற விட்ட பொக்கிஷம் என கண்ணீர் வடிக்கும் அளவிற்கு உங்களது பேச்சு இருப்பதாக கூறி வருகின்றனர்.