
திமுக ஆட்சிக்காலத்தில் மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, சுமார் ரூ.397 கோடி மதிப்பிலான மின்மாற்றி (Transformer) கொள்முதலில் முறைகேடு புகாரில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை எதிர்த்து தமிழக அரசின் மின்வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன்மூலம், செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த மெகா ஊழல் புகாரை சிபிஐ தான் விசாரிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை, ஆளுங்கட்சி அமைச்சருக்கு எதிராக நேர்மையான விசாரணையை முன்னெடுக்கும் என்பதில் நம்பகத்தன்மை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டியே உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணையை உறுதி செய்தது. தற்போது உச்சநீதிமன்றமும் அதனை வழிமொழிந்துள்ளதால், திமுகவுக்கும் செந்தில் பாலாஜிக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மறுபுறம், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகக் கூறி கட்சித் தொடங்கியுள்ள நடிகர் விஜய், இவ்வளவு பெரிய ஊழல் விவகாரம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனம் காப்பது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. ‘தமிழகத்தின் புதிய விடியல்’ எனத் தன்னை முன்னிறுத்தும் விஜய் வாய் திறக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக, திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளை வைத்து ஆட்சி நடத்துவதால் மவுனம் காக்கிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. வட்டாரங்களில் வலுத்துள்ளது.
.ஊழலுக்கு எதிராகக் கொடி பிடிப்பதாகக் கூறும் விஜய்,திமுகவுக்கு எதிரான இத்தகைய முக்கியமான சட்டப் போராட்டங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து கருத்து தெரிவிக்காமல் "பாதுகாப்பான அரசியல்" செய்வது, அவர் உண்மையில் யாருக்காக அரசியல் செய்கிறார் என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது.
கூட்டணி கணக்குகளைப் போட்டுக்கொண்டு, அதன் காரணமாகவே செந்தில் பாலாஜி போன்ற அதிகாரமிக்க அமைச்சர்களின் ஊழல்களை அவர் விமர்சிக்கத் தயங்குகிறாரா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. மக்கள் நலன் சார்ந்த ஊழல் புகார்களில் மௌனம் காப்பது, மறைமுகமாக திமுகவை தற்காப்பது போன்றது என அரசியல் நோக்கர்கள் சாடுகின்றனர். செந்தில் பாலாஜிக்கு எதிரான சிபிஐ விசாரணை வளையம் ஒருபுறம் இறுகினாலும், விஜய்யின் இந்தத் தொடர் மௌனமும், கூட்டணி கட்சிகளை நோக்கிய அவரது மென்மையான போக்கும் அவரது அரசியல் பயணத்தின் நம்பகத்தன்மையை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது. நிஜமான மாற்றத்தை விரும்புபவர் ஊழலை உரக்கப் பேச வேண்டுமே தவிர, கூட்டணி ஆதாயங்களுக்காகக் கண்மூடி மௌனியாக இருக்கக் கூடாது என்பதே சாமானிய மக்களின் ஆதங்கமாக உள்ளது.
