Tamilnadu

என்ன தில் பார்த்தீங்களா இந்த பொண்ணுக்கு....? வேற லெவல் போராட்டம்...

Road
Road

நம்மை சுற்றி பல இடங்களில் சாலைகள் போடும் வேலை நடந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் அவ்வாறு போடப்படும் சாலைகள் அனைத்துமே மிகச் சிறந்ததாக இருக்கிறது என்று உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால் புதிதாக போடப்பட்ட சாலைகள் ஆனது கொஞ்ச நாட்களிலேயே விரிவடைவது, கொத்தாக உடைந்து வருவது போன்று பல சாலைகளை நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் பல சாலைகளில் குண்டும் குழியுமாக இருப்பதால் அவ்வப்போது பல விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.


இதுபோன்று சாலைகளின் நிலைமை இருப்பதினால் பொதுமக்கள் வாகனங்களை ஓட்டி செல்வதற்கே மிகவும் அச்சம் கொண்டு வாகனங்களை ஓட்டி வருகின்றனர். மேலும் மழை காலங்களில் சாலைகளில் உள்ள குழிகளில் மழைநீர் தங்கி விடுகிறது. அந்த சாலைகளில் வாகனங்கள் செல்லும் பொழுது தெரியாமல் அந்த குழிகளில் சக்கரங்கள் மாட்டிக்கொண்டு வெளிவர முடியாமலும் சிக்கிக்கொள்கின்றது. குழிகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அது எவ்வளவு ஆழமுடைய குழி என்பதையும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. இதனால் சில சமயங்களில் நடந்து செல்பவர்கள் கூட தவறி விழுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. 

மழை அதிகம் பெய்யாத காலங்களிலேயே இது போன்ற சாலைகளை சரி செய்யாமல் இருப்பதால் லேசான மழை பெய்தாலே சாலைகள் குளம் போல தண் ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கிறது. இவ்வாறு விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பு வரை செல்கிறது. இவ்வாறு பொதுமக்கள் அவதிப்பட்டு பல புகார்களை எழுதி வந்தாலும் கூட அவற்றை தொடர்ந்து கண்டுகொள்ளாமலும் இருந்து வருகின்றனர். இவ்வாறு சாலையின் நிலைமை இருப்பது சிலர் கண்டுகொள்ளாமலும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமலும் சலித்துக் கொண்டு செல்கின்றனர். இதனால் அடுத்தடுத்து தொடர்ந்து விபத்துகளும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சாலைகள் சரி செய்வதற்கு புகார்கள் எழுப்பப்பட்டாலும் கூட அதை தொடர்ந்து சாலைகள் புதிதாக போடப்படுவதும் அவை திரும்பி உடைந்து போவதும், குண்டும் குழியுமாக ஆவதும் தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் உள்ளது. அந்த அளவிற்கு சரியான தரத்துடன் சாலைகள் போடப்படுவது கிடையாது என்பதே உண்மை!! 

இந்த நிலையில் சாலையை சரி செய்ய வேண்டும் என்று தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் ஒரு பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்!! அவர் ஏன் போராட்டத்தில் ஈடுபட்டார்!! அதன் பின்னணி என்ன?? என்பதை குறித்து விரிவாக காணலாம்!! ஹைதராபாத்தில் உள்ள சாலைகள் படும் மோசமான நிலையில் இருப்பதால் பலரும் அவதிப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இது போன்ற சாலைகளில் பாதிக்கப்பட்டு இருப்பதால் மழைநீர் அங்கங்கு தேங்கி இருப்பதையும் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பாதிக்கப்பட்ட சாலையில் தேங்கியுள்ள தண்ணீரில் பெண் ஒருவர் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டு வந்துள்ளார். மேலும் இது போன்ற சாலையில் சென்று அவரின் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது என்றும், அதனால்தான் போராட்டம் மேற்கொண்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே சாலை சரி செய்யக்கோரி குழியாக உள்ள சாலையில் தேங்கியுள்ள தண்ணீரிலேயே அவர் சென்று அமர்ந்து போராட்டம் மேற்கொண்டுள்ளார். மேலும் அவர் கையில் வைத்திருந்த பேப்பர் ஒன்றில் "we want safety roads!! Won't you?? " என்ற வாக்கியம் கொண்ட தாளுடன் போராட்டத்தை மேற்கொண்டார். அதனைப் பார்த்து சாலையில் செய்பவர்களும் அவருடன் சேர்ந்து போராட்டத்தில் இணைந்தனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதோடு அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து சாலையை சரி செய்வதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை காத்திருந்து பார்க்கலாம்!!