Tamilnadu

"கைது" செய்யபட்ட திருமாறன் ஜி சிறைக்கு "செல்வதற்கு" முன்பு வெளியிட்ட பரபரப்பு... ஆடியோ !

thirumaran ji
thirumaran ji

தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் ஜி கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், தேவர் குரு பூஜைக்கு செல்லும் வழியில் தகராறில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு திருமாறன் கைது செய்யபட்டதாக கூறப்படுகிறது.


இந்த சூழலில் "தான்" திட்டமிட்டு கைது செய்யப்பட்டதாகவும், திருச்சியில் பெரியாருக்கு சிலை வைக்க கூடாது எனவும் மேலும் தேவருக்கு 150 அடி உயரத்தில் தேவர் சிலை வைக்கப்படும் எனவும் நான் தெரிவித்த காரணத்திற்காக திட்டமிட்டு ஆளும் கட்சி தன்னை பழிவாங்கி இருப்பதாகவும், வழக்கமாக செல்லும் பாதையில் தேவர் ஜெயந்திக்கு அழைத்து செல்லாமல் வழிமாறி அழைத்து சென்று இப்போது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்க இருப்பதாகவும் திருமாறன் தெரிவித்துள்ளார்.

தான் இந்துக்களுக்காக குரல் கொடுத்த காரணத்திற்காக தன் மீது ஆளும் அரசாங்கம் பொய் புகாரில் கைது செய்ய முயலுவதாகவும் திருமாறன் தெரிவித்துள்ளார், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக பேசும் நபர்கள் மீது திட்டமிட்டு கைது நடவடிக்கை எடுக்க படுவதாகவும், ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தவறு செய்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில் திருமாறன் ஜி கைது செய்யபட்டதற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன, இதற்கு முன்னர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்து விமர்சனம் செய்ததாக திருமாறன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு திருமாறனை மதுரையில் கைது செய்ய முயன்றதாகவும் கடும் எதிர்ப்பு காரணமாக காவல்துறை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தற்போது திட்டமிட்டு திருமாறன் ஜி யை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக கூறப்படுகிறது, மேலும் திருமாறன் தனியார் யூடுப் சேனல் ஒன்றிற்கு  சிறைக்கு செல்வதற்கு முன்னர் ஆடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார் அதில் ஆளும் அரசாங்கம் குறித்தும் என்ன நடந்தது என்பது குறித்தும் விரிவாக குறிப்பிட்டுள்ளார் திருமாறன் பேசிய ஆடியோ கேட்க கிளிக் செய்யவும்.