Cinema

உடனே ஆரமிக்கணும்...! நமக்கு நேரமில்லை - 234 தொகுதி நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட உத்தரவு..!

Actor vijay
Actor vijay

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் தனது பிறந்தநாள் அன்று பத்தாம் வகுப்பு மற்றும்12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசையும் வாழ்த்துக்களையும் கூறி விழா ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பத்தாம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நிலையில் விஜய் அரசியல் ஆசையில்தான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார் என பரவலாக பேசப்பட்டது.. அவர்களில் சிலர் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற தங்கள் கருத்தையும் தெரிவித்த நிலையில் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என பேச்சு எழுந்தது!


மேலும் விழாவில் நடிகர் விஜய் பேசும்போது அரசியல் குறித்த சூசகமான கருத்துக்களை எடுத்து வைத்துள்ளார்.  விஜய் மாணவர்களிடம் பேசும் போது அனைவரும் தங்கள் அப்பா அம்மாவிடம் சென்று ஓட்டு போடுவதற்கு காசு வாங்காதீர்கள் என்ற அறிவுரையை  கூறுங்கள் என்றும் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் தவறான முடிவுகள் எடுக்காமல் வெற்றி பெற வேண்டும் என்ற அறிவுரையும் கூறிய நிலையில் விழாவில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெற்றன.

நடிகர் விஜய் பனையூரில் உள்ள தனது இல்லத்தில் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்களுடன் இரண்டு தினங்கள் முழு ஆலோசனை நடத்தினார், அந்த ஆலோசனையில் திருவள்ளூர் அரியலூர் பெரம்பலூர் திண்டுக்கல் தேனி என தமிழகத்தின் 234 தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்தது மட்டுமல்லாமல் அவர்களை சந்தித்து ஆலோசனை கூறியதாகவும் வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த ஆலோசனை கூட்டம் அடுத்த மாதமும் நடக்க வாய்ப்பிருப்பதாக என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கல்வி விருது வழங்கும் விழா நன்றாக நடைபெற்றதற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய பிரச்சினை என்ன? என்றும் அவர்களை நலம் விசாரித்தும் மேலும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்ற செய்தி பரவலாகி வருகிறது.  

நடிகர் விஜயின் இந்த செயல் அரசியல் வட்டாரங்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசித்த நிலையில் அவர் என்ன பேசினார் என்றசெய்தி பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடிகர் விஜய் என்ன பேசினார் என்று அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்த நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அதனை பகிர்ந்துள்ளனர், 'நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட்டால் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் அரசியலில் மட்டுமே முழுமையாக ஈடுபடுவேன், நமக்கு அனைத்து சமுதாய மக்களும் முக்கியம், குறிப்பாக முதல்முறை வாக்காளர்களை குறிவைத்து வேலை செய்யுங்கள்! சினிமா மட்டுமே அரசியலுக்கு பத்தாது வாக்கு வேண்டும் என்றால் இறங்கி வேலை செய்யவேண்டும் என பேசியதாக கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் கிசுகிசுகின்றனர். 

நடிகர் விஜய் முதன் முறையாக தனது அரசியல் பற்றிய கருத்தை ஆலோசனைக் கூட்டத்தில் பகிர்ந்துள்ளார் என்ற செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை மட்டுமல்ல மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது! மேலும் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என்று மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதி அளித்துள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு விஜய் கண்டிப்பாக அரசியலில் களம் இறங்குவார் என்று உறுதியாக தெரிகிறது.

இதுமட்டுமல்லாமல் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு இரவு பாடசாலை திறக்கவும் விஜய் முடிவு செய்துள்ளாராம்! இந்த இரவு பாடசாலையை 234 தொகுதிகளிலும் திறந்து இளம் தலைமுறையினருக்கு நூலகம், படிப்பகம் போன்ற சேவைகளை வழங்கவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது! இதன் பின்னணியில் முதல் முறை வாக்காளர்களை குறிவைப்பதே காரணம் எனவும் கூறப்படுகிறது!