Cinema

சூரியின் சினிமா "டயலாக்" அவருக்கே நடந்தது... பாவம்யா மனுஷன் !

Actor soori
Actor soori

நடிகர் சூரி ஹோட்டலை திறந்தாரும் திறந்தார் அதன் மூலம் அவர் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல, ஒரு பக்கம் அவர் ஹோட்டலை வைத்து பல கோடி சம்பாரிப்பதாக ஒரு குரூப் கிளப்பி விட அதனை மறுத்த சூரி உணவகம் தொழிலை சேவையாக செய்து வருவதாகவும் அதன் மூலம் வரும் வருமானம் என்ன என்பது குறித்தும் வெளிப்படையாக பல இடங்களில் பேசி இருக்கிறார்.


இந்நிலையில் சூரியின் உணவகங்களில் தமிழக அரசின் வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது அரசியல் பழி வாங்களா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது, மதுரை காமராஜர் சாலையிலுள்ள நடிகர் சூரியின் அம்மன் ஓட்டலில் வணிகவரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

சூரிக்கு மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம் உள்ளிட்ட இடங்களில் அம்மன்' என்ற பெயரில் ஓட்டல்கள் உள்ளன. சமீப காலத்தில் துவக்கப்பட்ட இந்த ஓட்டல்கள் சூரியுடையது என்பதால் எந்நேரமும் பிஸி'யாக செயல்பட்டன.


இந்த ஓட்டல்களுக்கு தலைமையிடமாக காமராஜர் சாலை தெப்பக்குளம் அருகே ஓட்டல் உள்ளது. இங்கு நேற்று மாலை வணிகவரித்துறை அதிகாரி செந்தில் தலைமையில் ஐந்து பேர் குழு சோதனை நடத்தினர். உணவுப்பொருட்கள் கொள்முதலில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் சோதனை நடந்தது.

 இச்சோதனையின் போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், அலுவலகத்திற்கு வந்து நேரில் விளக்கமளிக்கவும் ஓட்டல் ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர். இங்குதான் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது, சூரி அரசு மருத்துவனை உள்ளே ஹோட்டலை திறக்க தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அழைத்து இருந்தார்.

PTR.தியாகராஜன்தான் சூரியின் உணவகத்தை திறந்து இருந்தார், அதே நேரத்தில் மதுரை அரசியல் என்பது மதுரை திமுகவில் அமைச்சர்கள் PTR அணி, மூர்த்தி அணி என இரண்டாக பிரிந்து அரசியல் நடைபெறுகிறது என்பது ஊருக்கே தெரியும், மதுரை மேயர் தேர்வில் அமைச்சர் மூர்த்தி முன்மொழிந்த வேட்பாளரை நிராகரித்து, அமைச்சர் PTR முன்மொழிந்த வேட்பாளரை மேயராக தேர்வு செய்ததில் இருந்தே அமைச்சர் மூர்த்திக்கும் பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையே நடந்த பணி போர் வெளிச்சத்திற்கு வந்தது.

மேயர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார் அமைச்சர் மூர்த்தி இப்படி மதுரையில் எதிரும் புதிருமாக அரசியல் செய்யும் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மூர்த்தி இடையே திமுகவினர் சிக்கி சிதைவது ஒருபுறம் என்றால் அதில் சூரியும் சிக்கிவிட்டாரோ என்ற சந்தேகத்தை எழுப்பு கின்றனர் மதுரை வாசிகள்.

சூரியின் ஓட்டலில் ரெய்டில் ஈடுபட்டது வணிகவரித்துறை அதிகாரிகள், வணிக வரித்துறைக்கு அமைச்சராக இருப்பவர் மூர்த்தி, இந்த சூழலில் சூரி பழனிவேல் தியாகராஜனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சூரியின் ஓட்டலில் ரைடு நடைபெற்று இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகின்றனர் அந்த மாவட்டத்தை சேர்ந்த எதிர்க்கட்சிகள்.

மொத்தத்தில் சூரி சினிமா திரைப்படம் ஒன்றில் உங்க சண்டையில் நான் என்னயா செஞ்சேன் என கேட்பார்... அதே போல் இப்போது சூரியின் நிஜ வாழ்விலும் நடந்து இருக்கிறதோ என்று பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ளனர். மக்களின் சந்தேகத்தை போக்க உடனடியாக வணிக வரித்துறை அதிகாரிகள் சூரியின் ஓட்டலில் நடத்திய ரைடில் என்ன ஆவணங்கள் கிடைத்தது அவர் வரி ஏய்ப்பு செய்தாரா? அல்லது முறையாக வரிகளை கட்டிவருகிறாரா? என்ற விளக்கத்தை கொடுத்தால் மட்டுமே அமைச்சர்களை சுற்றி வலம் வரும் தகவல்களுக்கு முற்று புள்ளி வைக்க முடியும்.