24 special

ஆளுநரின் டெல்லி பயண அதிர்ச்சி தகவல் ! அமித்ஷா உடன் முக்கிய சந்திப்பு?

Rn Ravi amishah
Rn Ravi amishah

தமிழக ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்ட சம்பவம் அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக  பார்க்கப்படுவதற்கு பின்னணியில் எந்த விஷயத்தை மேலிடம் வரை கொண்டு சென்று உள்ளாரோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது 


தமிழக ஆளுநர் ஆர் என் ரவி எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் சனாதனம் பேசுகிறார் என்றும், மாநில உரிமைகளில் தலையிடுகிறார் என்றும், குறிப்பாக எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் திருக்குறள், புதிய கல்விக்கொள்கையில் தலையிடுவது, மாநில அரசின் முடிவுக்கு எதிராக உள்ளது என வெளிப்படையான கருத்து தெரிவித்து வந்தாலும், பல்கலை கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக  முதல்வருக்கு வழங்கி சட்ட பேரவையில்  தீர்மானமும் போடப்பட்டு அந்த தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்துள்ளார் என்பது தான் ஆளுங்கட்சிக்கு ஆளுநர் மீது கோபம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

ஆனால்.. அது மட்டும் தான் விஷயமா என்றால்....  சமீபத்தில் நடந்த கோவை சர்ச்சை விவகாரம் தொடர்பாக  என்ஐஏ -விற்கு மாற்ற கால தாமதம் ஏன்? என பேசி இருந்தார் ஆளுநர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக  ஆளுங்கட்சியை சேர்ந்த பத்திரிக்கை ஒன்றில் என்ன குறை கண்டார் ஆளுநர்? என்ற தலைப்பில் செய்தியை  வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே அண்ணாமலையை சமாளிக்க முடியாமல் டென்க்ஷனில் இருக்கும் சில அரசியல் புள்ளிகள் மற்றும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் புலம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் பத்தாத  குறையாக இப்போது ஆளுநரும் மாநில அரசின் முடிவுக்கு எதிராகவே பல நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார் என போர்க்கொடி தூக்கி உள்ளனர் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள். 



இதனை தொடர்ந்து, திமுக, தன் கட்சி எம்பிக்கள் மட்டுமின்றி கூட்டணி கட்சிகளின் எம்.பிக்களும் "ஆளுநரை  திரும்ப பெற வேண்டும் " என்பதனை வலியுறுத்தி, அனைவரிடத்திலும் கையெழுத்து பெற்று வருகிறது. இந்த  கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்ப முடிவு எடுத்து இருந்த நிலையில், கடிதம் செல்வதற்கு முன்பாகவே ஆளுநர் டெல்லி சென்று இருப்பது தான் இங்கு திருப்பு முனையே.

டெல்லி சென்ற ஆளுநர் மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களையும், மேலும் குறிப்பிட்ட அமைச்சர்களையும் சந்தித்து முக்கிய சில விஷயத்தை பேச உள்ளதாக தகவல்  கசிந்து உள்ளதாம். இது தவிர  தமிழக அரசியல் புள்ளி ஒருவர், மிக பெரிய அளவில் ஊழல் செய்துள்ளதாகவும் அதற்கான ஆதாரத்தை பாஜக கையில் வைத்துள்ளதாக அக்கட்சியை சேர்ந்தவர்கள் சிலர் பேட்டியும்  கொடுத்து இருந்தனர். இது தொடர்பான  அனைத்து ஆதாரங்களோடு தான் தற்போது ஆளுநர் டெல்லி  பறந்துள்ளதாகவும் பேசப்படுகிறது. 

மேலும், இன்னும் சில வாரங்களில், தமிழகத்தில் மிக பெரிய அளவில் ஒரு பிரச்சனை வெளிவர வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் பல கோப்புகளுடன் தான் ஆளுநர் டெல்லியில் அறிக்கை  சமர்ப்பிக்க  சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை எல்லாம் அலசி ஆராய்ந்த மாநில அரசும் ஆளுநரின் மாநில  உரிமையில் அதிகாரம் செலுத்துகிறார், புதிய கல்விக்கொள்கை அமல் படுத்துவது குறித்தெல்லாம் பேசுகிறார்  என கடும் குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.