
லாலு பிரசாத் வழக்கில் சிபிஐ நீதிமன்றம் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பளித்த நிலையில் லாலு போன்றே தமிழகத்தில் சிறைக்கு செல்ல போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது .
லாலு பிரசாத் யாதவ் பீகார் அரசியலில் பெரிய பங்கு தாரர். இவர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின்  தலைவர் ஆவார். பீகார் மாநில முதல் மந்திரியாக இருந்தவர். மாட்டு தீவன வழக்கில் தண்டனை பெற்ற போது  தனது மனைவி ராபரி தேவி அவர்களை முதல் மந்திரி ஆக்கி 2 வருடம் பிஹாரை ஆட்சி செய்தார். இவர் மன்மோகன் சிங் அரசில் ரயில்வே மந்திரியாகவும் 5 வருடம் பதவி வகித்தார். 
இவர் ரயில்வே மந்திரி பொறுப்பில் இருந்த போது ரயில்வே நிர்வாகம் நஷ்டத்தில் இருந்து லாபத்திற்கு மாறியது என்ற பெரிய பேச்சு நிலவியது. மன்மோகன் சிங் அவர்களுக்கு கிடைக்காத புகழ் இவருக்கு கிடைத்தது. இவர் ஹார்வர்ட் மற்றும் வார்ட்டன் பல்கலைக்கழக மாணவர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் முன் ஹிந்தியில் உரையாற்றி உள்ளார். இவரது பேச்சு எப்போதும் ஒரு வேடிக்கையாக இருக்கும், மிக தமாஷாக பேசக் கூடியவர். 
வட இந்தியாவில் உருளை கிழங்கு (ஆலு) பெரிதும் அத்தியாவசிய காய் ஆகும், எல்லா பூரி மசாலாவிலும் ஆலு இல்லாமல் இருக்காது. அப்படிதான் லாலு இல்லாத அரசியலும் என்று பேசப்பட்ட காலம். நாடாளுமன்றத்தில் இவரது பேச்சு மிகுந்த வேடிக்கையாக இருக்கும். இவர் ரயில்வே மந்திரி ஆக இருந்த போது ரயில் கட்டணங்களை உயர்த்தவில்லை என்ற பெருமை கொண்டவர்.
சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இன்று (15-02-2022) நிலுவையில் இருந்த ஐந்தாவது மாட்டு தீவன ஊழல் வழக்கையும் முடித்து இவர் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்துள்ளது. இந்த ஊழல் அரசாங்க கருவூலத்திலுருந்து 950 கோடிக்கு மேலான பணம் சரியான கணக்கு காட்டப்படாமல் போலி கணக்குகள் மூலம் கையாள பட்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டு உள்ளது. இவர் தற்போது ஜாமீனில் விடுதலையில் உள்ளார்.
இன்றைய தீர்ப்பின் மூலம், இவரது தண்டனை எவ்வளவு ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடும் என்பது வரும் 18 ஃபிப்ரவரி தெரிய வரும். டொரண்டா கருவூலம் -மாட்டு தீவன வழக்கு பிஹாரில் பெரிது. மொத்தம் 170 பேர் குற்றவாளிகளாக கருதப்பட்டார்கள். 55 பேர் இறந்து விட்டார்கள், 6 பேர் காணாமல் போய் விட்டார்கள். 1996 இல் புனையப்பட்ட வழக்கு, சுமார் 25 வருடம் கழித்து தீர்ப்பு வந்துள்ளது.
ஒரு முறை, மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்த அரசாணை ஒன்றை பொது வெளியில் கிழித்து போட்டு நாடகம் ஆடினார். அப்போதில் இருந்து லாலுவின் அரசியல் பயணம் பின் நோக்கி நகர ஆரம்பித்தது. இப்போது முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது என்றே சொல்லலாம். இவரது கட்சி தலைவர் பொறுப்பை இவரது மகன் தேஜஸ்வி யாதவிற்கு கொடுத்துவிட்டு மீண்டும் சிறைக்கு செல்ல நேரிடும் என்பதே எதிர்ப்பார்ப்பு.
சட்டம் தன் கடமையை செய்தாலும், கொஞ்சம் துரிதமாக வழக்குகள் முடிக்கப்பட்டால் தேசம் நலம் பெற்று மேலும் ஊழல் குறையும் என்று சாமானியர்கள் நியாயமாக எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்ப்பார்ப்பும் சரியானதே.
இந்த சூழலில் இதே போன்று 2ஜி வழக்கு BSNL வழக்கு என தமிழகத்தை சேர்ந்த எம்.பி-கள் கனிமொழி, ஆ.ராசா தயாநிதி மாறன் மீது வழக்குகள் விசாரணையில் உள்ளன, இது தவிர்த்து திமுகவை சேர்ந்த பல்வேறு எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அமைச்சர் பொன்முடி மகன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது வருகின்ற நாட்களில் இந்த வழக்குகளில் விசாரணை தீவிரப்படுத்த படும் என்பதால் லல்லு போன்று தமிழகத்தில் யார் சிறைக்கு செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
More Watch Videos

 
                                             
                                             
                                            