India

முதலில் பிரதமர் அடுத்தது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்தை சந்தித்த ஆளுநர் ரவி என்ன நடக்க போகிறது ?

trn ravi and pm modi
trn ravi and pm modi

தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றபின் முதல் முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமரை சந்தித்தார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆளுநர் மாளிகை, மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் பிரதமருடன் தமிழக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து ஆளுநர் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நலனுக்கான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்குமென பிரதமர் உறுதியளித்ததாக கூறப்பட்டது .


இந்த சூழலில் ஆளுநரின் பயணம் மரியாதையை நிமித்தமானதா ? இல்லை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமா  என்ற கேள்வி ஆளுநர் பயணத்திற்கு முந்தைய நாளில் தமிழகத்தில் எழுந்தது இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் அடுத்தடுத்து ஆளுநர் மாளிகையில் அரங்கேறிய சம்பவங்கள்தான் ,தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு ,பாஜக  மாநிலத்தலைவர் அண்ணாமலை சந்திப்பு என பல்வேறு திருப்பங்கள் அரங்கேறின .

இந்த சூழலில் சரியான திட்டமிடல் உடன் ஆளுநர் டெல்லிக்கு சென்று இருப்பது தெரியவந்துள்ளது ,அரசியல் ரீதியாகவும் ,பாதுகாப்பு ரீதியாகவும் ஆளுநராக பொறுப்பேற்ற தினத்தில் இருந்து முழுவதுமாக துறை சார்ந்த அலுவலர்கள் உடன் ஆலோசனை நடத்தி உள்ளார் ரவி , தமிழகத்தில் நிதி நிலவரம் டெண்டர் ,மற்றும் புதிதாக பொறுப்பேற்ற குழுக்கள் பலவற்றிற்கு என்ன பணி  என்பது குறித்து தலைமை செயலக அலுவலர்களிடம் கேட்டு பெற்றுள்ளார் .

அத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் முழு பட்டியலை திரட்டி அளித்துள்ளார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன , வழக்கமாக ஆளுநர்கள் அரசுமுறை பயணமாக டெல்லி சென்றால் உள்துறை அமைச்சரை சந்திப்பது மரபு ,தற்போது உள்துறை அமைச்சர் அமிட்ஷா காஷ்மீர் மாநிலத்திற்கு பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய கிளம்பியுள்ளதால் அவரை சந்திக்கவில்லை அதன் பிறகு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆளுநர் தெரிவித்த விவரங்கள் பாதுகாப்பு ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளன .

எல்லையோர மாநிலமான தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்த காரணத்தால் சென்னையில் தேசிய புலனாய்வு அமைப்பான NIA கிளை தொடங்கப்பட்டது  , இங்கிருந்து கேரளா , தமிழ்நாடு உட்பட தென்மாவட்டங்களில் நடைபெறும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பு நடவடிக்கைகள் இங்குதான் மேற்கொள்ள படுகின்றன , இதில் முக்கியமான தகவல்கள் அடங்கிய பைலை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து அளித்துள்ளார் என்கின்றனர் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் .

திமுக எம்.பி கள் ஆ ராசா ,கனிமொழி ,கௌதம சிகாமணி ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குகள் உட்பட வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகள்  விரைவில் இறுதிக்கட்டத்தை எட்ட இருப்பதாக tnnews 24 நேற்று முக்கிய தகவல்களை வெளியிட்டு இருந்தோம் அந்த வகையில் ஆளுநரின் டெல்லி பயணம் வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பாக மட்டும் இல்லாமல் அரசியலும் பாதுகாப்பு சார்த்த முக்கிய தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முக்கிய சந்திப்பாகவே அமைந்துள்ளது .