24 special

பதிவுகளை நீக்க கோரி எச்சரிக்கை..? அதை நியாயப்படுத்தலாமா மத்திய அரசு கேள்வி..!

udaipur
udaipur

ராஜஸ்தான் : கடந்த சில தினங்களுக்கு முன்னர் வகுப்புவாதிகளால் உதய்பூரில் வசிக்கும் தினக்கூலியான கன்ஹையா படுகொலை சம்பவத்தை சமூக ஊடகங்களில் பலர் கொண்டாடி வருவதுடன் அதை நியாயப்படுத்தியும் புகழ்ந்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக நடுநிலையாளர்கள் பலர் மத்திய அரசிடம் புகார் தெரிவித்துள்ளனர்.


அதைத்தொடர்ந்து மத்திய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனைத்து சமூக ஊடகங்களும் உதய்ப்பூர் படுகொலையை நியாயப்படுத்தி அதை பாராட்டி அல்லது ஊக்குவிக்கும் விதமாக இடப்பட்டுள்ள அத்தனை உள்ளடக்கங்களையும் விரைந்து அகற்றுமாறு சமூக ஊடக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் " பொது அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுக்க சமூக ஊடக நிறுவனங்களும் முன்வரவேண்டும். ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட கொலை தொடர்பான வீடியோக்கள் தவிர அந்த கொலையை மகிமைப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் விதமாகவும் ஊக்குவிக்கும் விதமாகவும் அதை நியாயப்படுத்தியும் உள்ளடக்கங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாவது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

சமூக ஊடக நிறுவனங்கள் இதற்க்கு இடைத்தரகராக இருப்பதால் அவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து இதுபோன்ற பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும். இந்த அறிவிப்பின் மூலமாக விடா முயற்சி மற்றும் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை ஆகிய உங்கள் பொறுப்பான கடமையின் ஒரு பகுதியாக அனைத்து பதிவுகளையும் (வீடியோவாக, ஆடியோவாக, எழுத்து பதிவாக புகைப்படமாக) அது எந்த வடிவில் இருந்தாலும் அதை உடனடியாக அகற்றவேண்டும்.

பொது அமைதியை சீர்குலைப்பதை தடுக்கவும் சமூக நல்லிணக்கத்தை மீட்டெடுக்கவும் இந்த வடிவிலான உள்ளடக்கங்களை உடனடியாக அகற்றுவதை உறுதிசெய்யவேண்டும்" என மத்திய எலக்ட்ரானிஸ் மற்றும் தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சகம் சமூக ஊடக நிறுவனங்களுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.