India

டெல்லியில் அதிரடி மாற்றம்.. நாடாளுமன்றத்தில் புதிய "பில்" தாக்கல் மத்திய அரசு அதிரடி!

Modi
Modi

டெல்லியின் மூன்று மாநகராட்சிகளையும் ஒன்றாக இணைக்கும் மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது இது ஆளும் ஆம் ஆத்மீ கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இதற்கு ஆம் ஆத்மீ மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.


டெல்லியில் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு மாநகராட்சிகள் மூன்றையும் இணைத்து ஒரே மாநகராட்சியாக மாற்றும் வகையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது, மூன்றும் இணைத்து ஒன்றாவதோடு, அவற்றின் நிதி விவகாரங்களை மத்திய அரசு நேரடியாக கவனித்துக் கொள்ள முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மாநகராட்சியின் நிதி நிலையை மத்திய அரசு  நிர்வாகம் செய்வதால் எந்த கட்சி மாநகராட்சியில் வென்றாலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

நாட்டில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையில் 60% சதவீதத்துக்கும் அதிகமான தொகை மத்திய அரசிடம் இருந்து வருவதால் அதனை முறையாக நிர்வாகம் செய்ய மத்தியஅரசு இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது,

இந்த 'டில்லி மாநகராட்சி மாடல்' நாடு முழுவதும் வர வாய்ப்பு என்றும் ஏற்கனவே நாட்டின் உள்ளாட்சிகளில் நடைபெறும் மத்திய அரசு கட்டுமான பணிகளை மத்திய நேரடி கண்காணிப்பில் கொண்டு வர ஆயத்தங்கள் நடந்து வருகின்றன.

எனவே…. "உள்ளாட்சிகளில் ஜெயித்து விட்டோம், இனி காசடிக்கலாம்" என்று நினைத்திருப்போருக்கு விரைவில் கசப்பு மருந்து தர மத்தியரசு தயாராகிவிட்டது.

டெல்லியை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ளாட்சி நிதியை மத்திய அரசின் அதிகாரத்திற்கு கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறப்படுவதால் இப்போது எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.