24 special

அமிட்ஷா கருத்து தமிழச்சி தங்கபாண்டியன் வீடியோ வைரல்..! இப்போ சொல்லுங்க சரியா? தவறா?

amitsha
amitsha

அமிட்ஷா ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தி மொழியை இணைப்பு மொழியாக பயன்படுத்த தொடங்குங்கள் என குறிப்பிட்ட நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர் இந்த சூழலில் எழுத்தாளர் சுந்தர் ராஜ சோழன் திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதை குறிப்பிட்டு பதில் கொடுத்துள்ளார்.


இது குறித்து அவர் தெரிவித்தவை பின்வருமாறு :-திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் சொல்கிற இதே செய்தியைத்தான் திரு.அமித்ஷாவும் சொல்கிறார்..ஆங்கிலம் கூடாது என்பதோ,வேண்டாம் என்பதோ அல்ல அது.

நம்மை அடக்கி ஆட்சி செய்த,நம்மை கலாச்சாரத்தை விட்டு வெளியேற்ற புகுத்தப்பட்ட அதிகார மொழியை,இந்நிலத்திற்கு வெளியே இருந்து நம்மை அடிமை செய்த மொழியின் அதிகார வீச்சை,இந்திய மனங்களில் இருந்து நீக்குவது குறித்தே அவர் பேசுகிறார்..

ஆனால்,தமிழச்சி தங்கபாண்டியன் அதை தெளிவாக சொல்லியுள்ளார், காலனித்துவ அடிமை முறைக்கு எதிரான கிளர்ச்சியானது,நமது பண்பாட்டை நோக்கி திரும்புதல் என்கிறார். அதற்குள் மொழி,உணவு,உடை ஆகியவை எல்லாம் எப்படி பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்த அடையாள அரசியலாக செயல்படும் என்கிறார் நிற்க.

இந்த பண்பாடு பாரதத்தின் வேரில் முளைத்த ஆலமரம், அதை காப்பதற்கு எந்த நாமகரணத்தை நீங்கள் சூட்டிக் கொண்டாலும் அது தேசிய கோவர்த்தன குடையின் பாதுகாப்பில் உள்ளதாகத்தான் பொருள் அமித்ஷாவும் - தமிழச்சி தங்கபாண்டியனும் ஒரே விஷயத்தை அவரவர் புள்ளியில் பேசுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார் சுந்தரராஜ சோழன்.தமிழச்சி தங்கபாண்டியன் பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.