
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் முன் தள்ளப்பட்டு கல்லூரி மாணவியான இளம்பெண் சத்யா படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தையே உலுக்கியெடுத்துள்ளது. பலரும் கொலையாளி சதீஷுக்கு உனடியாக தண்டனை வழங்க வேண்டும் என கருத்துக்களை ஆவேஷமாக முன் வைத்து வருகின்றனர்.
சத்யா கொலை செய்யப்பட்ட விதம் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும் பொதுவெளியில் பெரும் தலைகுனிவையும் ஏற்படுத்துகிறது. கல்லூரி மாணவி தனது உயிரை இழந்தது மட்டுமல்ல, இப்பொழுது அவர் தந்தையும் உயிரிழந்துள்ளார். ஒரு குடும்பமே சோகத்திற்கு ஆளாகி இருக்கிறது.
இதுகுறித்து நடிகரும், இசையமைப்பாளருமாகிய விஜய் ஆண்டணி, ‘’சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கும் காரணமான சதீஷை, பொறுமையாக விசாரித்து 10 வருடங்களுக்கு பிறகு தூக்கில் போடாமல், தயவு செய்து உடனே விசாரித்து ரயிலில் தள்ளிவிட்டு தண்டிக்கும்படி சத்யாவின் சார்பில் பொதுமக்களில் ஒருவனாக நீதிபதியை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்’’ என கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சின்னத்திரை நடிகையும், மருத்துவருமான ஷர்மிளா விஜய் ஆண்டிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது பேசுபொருளாகி இருக்கிறது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அப்புறம் அவனுக்கும் நமக்கும் என்ன சார் வித்தியாசம் . முதலில் ஊடகங்களில் விஷமத்தனமான பரப்புவதை விட்டுவிட்டு இந்த சமூகத்தில் அன்றாடம் நாம் பார்க்கும் நுட்பமான பாலின பாகுபாட்டிற்கு எதிராக குரல் எழுப்புவோம் .
பெண்கள் மீதான அணுகுமுறையில் மாற்றம் தேவை’’ எனக் கருத்து தெரிவித்துள்ளார். ஷர்மிளாவின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
அதில் ஒருவர், ‘’என்னடா கொடுமையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவா பேசுவாங்கனு பார்த்தா இந்த பெண்ணியம், விசிக, திக குரூப் எல்லாம் கொலையாளிக்கு ஆதரவா பேசிட்டு இருக்காங்க. ஆக, பெண்ணியம் பேசுவதெல்லாம் வயித்துப் பிழைப்புக்குத்தான் போல. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை நினைத்துப் பார்ப்பதில்லை’’ என தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
அப்புறம் அவனுக்கும் நமக்கும் என்ன சார் வித்தியாசம் …first let us stop glorifying toxic masculinity in media and raise our voice against the subtle sexism that we see in our day to day life in this society ..what we need is a change of attitude towards women @vijayantony pic.twitter.com/6S9x8UVq6d
— Dr SHARMILA (@DrSharmila15) October 14, 2022