
தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். அந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே, ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் சிலரை சந்திக்க உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கரே கடுமையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். எனினும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா அல்லது அவசரச் சட்டம் பிறப்பிக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே இந்த விவரங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள சூழல் குறித்து விவாதிக்க மத்திய அரசு ஆளுநர் ரவியை டெல்லிக்கு அழைத்தது
இதனை தொடர்ந்து கடந்த ஏப்.17-ம் தேதி மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி சென்றார். அப்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்தும் தமிழகத்தில் நிலவும் சட்டஒழுங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை ஆளுநர் ரவி அப்போது சந்தித்துப் பேசினார். அதன்பிறகு ஊட்டியில் துணைவேந்தர்களின் மாநாடும் நடந்தது.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நேற்று 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்துக்கு எழுப்பினார்.இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி புறப்பட்டுச்சென்றார். அவருடன் ஆளுநரின் செயலர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரியும் டெல்லி சென்றுள்ளார்கள். ஆளுநரின் வழக்கமான பயணம் என ராஜ்பவன் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பயணம் பிரதமர் அலுவலக அழைப்பின் பேரில் அவர் சென்றிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
தமிழக ஆளுநர் ரவி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் முக்கியமான மத்திய அமைச்சர்கள் சிலரை சந்திக்க உள்ளதாகவும், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.இதனிடையே முதல்வர் ஸ்டாலின் அமைத்த துனைவேந்தர் நியமன குழுவுக்கும் ஆப்பு வைக்க முடிவு செய்யப்ட்டுள்ளதாம். துணை வேந்தர் நியமிப்பதில் நடந்த தில்லுமுல்லுகளை உச்சநீதிமன்றத்தில் வழங்கவும் முடிவு செய்துள்ளதாம் ஆளுநர் தரப்பு. துணைவேந்தர் நியமனம் முறைகேடுகளை விசாரிக்க சி.பி.ஐ உள்ளே இறங்கவும் வாய்ப்புள்ளதால் முதல்வர் ஸ்டாலின் தரப்பு என்ன செய்வதென்று முழித்து வருகிறதாம்.
ஏற்கனவே துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் சீராக இருப்பதில்லை. ஒரு வழக்கில் யுஜிசி வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்று கூறி துணைவேந்தர் நியமனமே ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குச் சில காலம் முன்பு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் யுஜிசி வழிகாட்டு நெறிகளின்படி திருப்திகரமாக இல்லை என்று சுட்டிக் காட்டி, துணைவேந்தரை சென்னை உயர் நீதிமன்றம் பதவிநீக்கம் செய்தது என்பது எல்லாம் குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் என்றால் சில மாதங்களில் தி.மு.க-வுக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் முளைக்கலாம்’ என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது எல்லாம் இனி எல்லாம் சைலன்ட் மூவ் தான் என்கிறார்கள். திமுகவில் முதல்வரை தவிர அவரை சுற்றி இருக்கும் அனைத்து அல்லக்கைகளுக்கும் விலங்கு தயாராக உள்ளது. முதல்வரே கொஞ்சம் அமைதியாக இருங்கள் நீங்கள் பேசிவிட்டு போய்விடுவீர்கள் மாட்டி கொள்வது நாங்கள் தானே என அறிவாலயம் அழுது புலம்ப தொடங்கியுள்ளது.